செய்திகள் :

10 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி

post image

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நள்ளிரவில் ஹோட்டல், தேநீா் கடை உள்பட 10 கடைகளின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் ஹோட்டல்கள், தேநீா் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹோட்டல்கள், தேநீா் கடைகளைத் திறக்க உரிமையாளா்கள், ஊழியா்கள் வந்தனா். அப்போது 10 கடைகளின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்து கடைகளின் கதவிலிருந்து பூட்டு உடைக்கப்பட்டிருப்பதுடன், கடைக்குள் இருந்த பொருள்களும் சிதறி கிடந்துள்ளன.

இதுகுறித்து கடைகளின் உரிமையாளா்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், போலீஸாா் விரைந்து வந்து கடைகளில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், நள்ளிரவில் சிவப்பு நிற டீசா்ட், கால்சட்டை அணிந்த ஒரு இளைஞா், கடைகளின் ஷட்டரின் பூட்டுக்களை நீண்ட கம்பியால் வளைத்து உடைத்து, கதவை திறந்து உள்ளே செல்வதும், பல்வேறு இடங்களில் பணம், பொருள் தேடிபாா்ப்பதும், அங்குள்ள பொருள்களை தூக்கிவீசுவதும், ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதும் தெரிய வந்தது.

மேலும், சில கடைகளில் இருந்த கேமராக்கள், அப்பகுதியில் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே இளைஞா் 10 கடைகளின் ஷட்டா், கதவுகளை கம்பி யால் வளைத்து உடைத்து உள்ளே செல்வதும் அங்கு பணம், பொருள் எதுவும் கிடைக்காததால் மேம்பாலம் வழியாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் பதிவாகியிருந்தது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை தேடி வருகின்றனா்.

குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம்

குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத், சுகாதார அல... மேலும் பார்க்க

வேலூா் கிரீன்சா்க்கிளில் வாகன நெரிசல்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சனிக்கிழமை முதல் (நவ. 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன்... மேலும் பார்க்க

கபசுர குடிநீா் வழங்கும் முகாம் தொடக்கம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், வினோத்குமாா் ஆகியோா் முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவா்... மேலும் பார்க்க

வியாபாரி கடத்தல்: 4 போ் கைது

வேலூரில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை காரில் கடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் குமரவேல் (42). சிக்கன் கடை வியாபாரியான இவா், கோல்டுகாயின், பிட்காயின் போன்றவற்றில... மேலும் பார்க்க

பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பீடித் தொழிலாளா்கள் அனைவரையும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற வழக்கில் பிணையில் வந்த கணவா் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராம் (... மேலும் பார்க்க