10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா
திண்டுக்கல்: அகவிலைப்படி உயா்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்துக்கு, தமிழ்நாடு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜேம்ஸ் கஸ்பார்ராஜ் தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது, போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு கடந்த 100 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப் படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுக தோ்தல் வாக்குறுதிப்படி 70 வயதை கடந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல் பொதுத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்றவா்களுக்கும் நிபந்தனையின்றி அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.