செய்திகள் :

`1000-வது திருட்டுக்கு வாழ்த்துகள்!' - BSNL டெர்மினேஷன் பாக்ஸ் திருட்டு... வடிவேல் பாணியில் ஃப்ளக்ஸ்

post image

BSNL கேபிள் கட், பாக்ஸ் திருட்டு...

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் 'ஆல்பா க்ரூப்ஸ்' என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் இணையதள கனெக்ஷனுக்காக கேபிள் பதிக்கும் கான்ட்ராக்ட்டை கமிஷன் அடிப்படையில் கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகிறார். இவர்தான், இப்படி வடிவேல் பட பாணியில் அதிரிபுதிரி ஃப்ளெக்ஸ் வைத்தவர். 'என்ன நடந்தது?' என்று அவரிடமே பேசினோம்.

"ஆலங்குடி, புதுக்கோட்டை பகுதிகளில் நான் கேபிள் பதிக்கும் கான்ட்ராக்ட்டை கடந்த 5 வருடமாக செய்து வருகிறேன். அவ்வப்போது, ஆலங்குடி பகுதியில் கேபிள்கள் அங்கங்கே திடீரென்று கட் செய்யப்படும். டெர்மினேஷன் பாக்ஸ்களும் திருடப்படும். யாரோ திருடர்களின் கைவரிசை என்று இருந்துவிடுவேன். ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் 290 - க்கும் அதிகமான இடங்களில் கேபிளை கட் பண்ணினார்கள். டெர்மினேஷன் பாக்ஸ்களையும் திருடினார்கள். உச்சக்கட்டமாக, ஆலங்குடி பி.எஸ்.என்.எல் எக்ஸ்சேஞ்சுகுள்ளேயே மூன்றுமுறை ஏறி குதித்து, கேபிளை கட் பண்ணினார்கள். இதனால், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் இன்டர்நெட் சேவை கட்டானதால், 90 - க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வேறு நிறுவன கனெக்ஷனுக்கு மாறினார்கள். அதன்காரணமாக, எங்களுக்கு ரூ. 30 லட்சம் வரை வீண் செலவானது. இதனால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

ஜோசப்

இதற்கிடையில், என்னை தனித்தனியாக பார்த்திபன், ஜெயசீலன், பெயர் தெரியாத ஒருவர் என்று மூன்று பேர் போன் செய்து, 'ஆலங்குடிக்கு பி.எஸ்.என்.எல் கேபிள் பதிக்கும் கான்ட்ராக்ட்டை உதயா எடுத்திருக்கிறார். இனிமே நாங்கதான். நீ ஒதுங்கிக்க. இல்லைன்னா நடக்கிறதே வேற' என்று மிரட்டினார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் ஆலங்குடி டவுனுக்கு பி.எஸ்.என்.எல்-ல் கான்ட்ராக்ட் கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே, குப்பக்குடிக்கு டிக் ஃபைபர் நிறுவன கான்ராக்ட்டை எடுத்திருந்த உதயா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அதே பகுதிக்கு பி.எஸ்.என்.எல் கான்ட்ராக்ட்டை எடுத்திருக்கிறார். இதனால், கேபிளை கட் செய்வது, பாக்ஸ்களை திருடுவது அவர்களின் வேலையாக இருக்குமோ என்று பார்த்திபன், ஜெயசீலன், பெயர் தெரியாத நபர் என்று மூன்று பேர்களை மென்ஷன் செய்து, ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை இல்லை.

வடிவேல் பாணியில் ஃப்ளக்ஸ்...

இதற்கிடையில், புதுக்கோட்டை நகரத்திலும் கேபிளை கட் செய்து, பாக்ஸ்களை திருட ஆரம்பித்தார்கள். அதுபற்றி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். உச்சக்கட்டமாக, பழைய பேருந்து நிலையத்தில் இருந்த மெயின் சிலிண்டர் டெர்மினேஷன் பாக்ஸை திருடினார்கள். அதனால், புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகம், கோர்ட், எஸ்.பி ஆபிஸ், இ.பி ஆபிஸ், வங்கிகள் என்று முக்கியமான அலுவலகங்களில் 16 மணி நேரம் இன்டர்நெட் சேவை கட்டானது. அதனால், 'ஆலங்குடியில் சி.சி.டி.வி-க்கே தண்ணி காட்டும் எங்கள் திருடர்குல திகலமே, அண்ணன் ஸ்டைல் ஸ்ப்ளென்டர் பாண்டி அவர்கள்து 300 - வது திருட்டு விழா வெற்றி பெறவும், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை துரிதமாக தொந்தரவு செய்து 1000 - வது திருட்டு விழாவை கொண்டாட வாழ்த்துகிறோம்' என்று என்னோட வேதனையை ஃப்ளெக்ஸாக வைத்தேன்.

கைது செய்யப்பட்ட ஜெயசீலன்

சி.சி.டி.வி காட்சி ஆய்வு, ஜெயசீலன் கைது..!

அதைத்தொடர்ந்து, ஆலங்குடி காவல் நிலைய போலீஸார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, இந்த வேலைகளை செய்ததாக ஜெயசீலனை கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் இதுபோன்று செய்தது ஜெயசீலன் இல்லை என்பதால், இதற்கு பின்னே பெரிய கும்பலே இருக்குமோ என்ற நினைக்கத் தோன்றுகிறது. கேபிள் பதிக்க அதிக கமிஷன் தரும் தனியார் நிறுவனங்களின் இன்டநெட் கேபிள் பதிக்கும் கான்ட்ராக்ட்டை எடுத்திருக்கும் பலரும், ஆலங்குடியில் பி.எஸ்.என்.எல் மீது கெட்ட அபிப்ராயத்தை உருவாக்கி, அந்த வாடிக்கையாளர்களை டி.சி.சி.எல் - ன் டிக் ஃபைபர் உள்ளிட்ட வேறு தனியார் நிறுவனங்களின் இன்டர்நெட் இணைப்புகளுக்கு மாற்றுவதற்காக ஜெயசீலனை தூண்டிவிட்டு, இப்படி திருட வைத்திருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. டிக் ஃபைபர் வைத்திருக்கும் உதயா, பார்த்திபன் உள்ளிட்ட இன்னும் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது" என்றார்.

காவல் ஆய்வாளர் சொல்வதென்ன?

இதுபற்றி, ஆலங்குடி காவல்நிலைய ஆய்வாளர் பாலகிருத்திகாவிடம் பேசினோம்.

"அந்த பி.எஸ்.என்.எல் விவகாரமா?. அதில், ஜெயசீலன் எனபவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். நான் மூன்று ஸ்டேஷன்களுக்கு இன்சார்ஜ். இந்த விவகாரம் மட்டும் நான் விசாரிக்கவில்லை. அதனால், நீங்கள் சொல்லும் விசயங்கள் புகாரில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுதான் சொல்ல முடியும்" என்றார் வேண்டா வெறுப்பாக!.

வடிவேல் பட பாணி ஃப்ளெக்ஸ்

BSNL அதிகாரி விளக்கம்..!

இதுபற்றி, பி.எஸ்.என்.எல் புதுக்கோட்டை இளநிலை தொலைதொடர்பு அதிகாரியான ஷங்கரிடம் பேசினோம்.

"அக்டோபர் மாதத்தில் இருந்து அதிகமான திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. அதேபோல், அங்கங்கே அரை கிலோமீட்டர் தூரத்துக்கு கேபிளை துண்டு துண்டாக நறுக்கிப் போட்டார்கள். திட்டமிட்டு எங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களிடம் கெட்டப் பெயரை உருவாக்க இப்படி செய்தார்கள். இதனால், எங்கள் தரப்பிலும் புகார் கொடுத்தோம். புதுக்கோட்டையில் நடைபெற்ற விவகாரம் பற்றி புகார் கொடுக்க இருக்கிறோம்" என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த உதயா

இறுதியாக, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு உதயாவிடம் பேசினோம்.

"நாங்கள் பல வருடங்களாக கேபிள் டி.வி ஆபரேட்டராக இருக்கிறோம். அதைதவிர, கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் சங்கத்தின் டிக் ஃபைபர், கடந்த 5 மாதங்களாக பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட இன்டர்நெட் இணைப்புகள் கொடுக்க கேபிள் பதிக்கும் கான்ட்ராக்ட்டுகளை எடுத்து செய்து வருகிறேன். ஜெயசீலன் கல்லாலங்குடி பகுதி கேபிள் டி.டி ஆபரேட்டர். ஜோசப் எங்கள் கேபிள் டி.வி வாடிக்கையாளர்களிடம் பேசி, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களாக மாற்றி வந்தார். அதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஜெயசீலன், ஜோசப்புக்கு போன் செய்து, 'எங்கள் வாடிக்கையாளர்களை உங்கள் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டாம்' என்று பேசியியிருக்கிறார்.

உதயா

ஆனால், ஜோசப் அதை தொடர, அந்த கோபத்தில் பல இடங்களில் கேபிளை வெட்டிவிட்டார். மற்றபடி, அவர் எதையும் திருடவில்லை. அவரை திருடனாக சித்தரித்து, அவர் வாழ்க்கையை பாழாக்கிவிட்டார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனம் கேபிள் டி.வி ஆபரேட்டர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற நாம்ஸை மதிக்காமல், புதுக்கோட்டையில் 90 சதவிகிதம் ஜோசப்புக்கே கான்ட்ராக்ட் கொடுத்துள்ளது. அதுபற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளோம். அதேபோல், எங்கள் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் சார்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

போதையில் லாரி ஓட்டிய கிளீனர்; சாலையோரம் துங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் நாட்டிக பகுதியில் சாலை ஓரத்தில் நாடோடி பழங்குடிகள் குழுவைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட சுமார் 10 பேர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கண்ணூரில் இருந்து கொச்சிக்கு மரத்தட... மேலும் பார்க்க

வேலூர்: பாலியல் அத்துமீறலால் கர்ப்பமடைந்த சிறுமி - இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (26).கடந்த 2022-ம் ஆண்டு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகேயுள்ள ஒரு பகுதியில் செங்கல் சூளையில... மேலும் பார்க்க

பெண்ணை காதலித்து ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய கோவை இளைஞர் - சரமாரியாக வெட்டி கொன்ற அப்பா, மகன்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (27). இவர் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தமிழ்செல்வனின் அம்மாவுக்கு விருதுநகர் மாவட்டம... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய்க்கு நடந்த சோகம்; போலீஸில் புகாரளித்த கோவை இளைஞர்... துக்க வீடாக மாறிய திருமண வீடு!

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், உமா தம்பதி ரப்பர் லேபிள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகன் சரத், தனியார் நிறுவனத்தில் மே... மேலும் பார்க்க

32 `ஸ்ப்ளெண்டர்’ பைக்குகளை திருடிய 3 இளைஞர்கள் - குடியாத்தத்தை அலறவிடும் சட்டவிரோத நெட்வொர்க்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதிகளில் தொடர் பைக் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.ஆந்திர மாநில பகுதியையொட்டி குடியாத்தம் அமைந்திருப்பதால், இருமாநில சாராயக் கும்பலுடனும், செயின் பறிப்புக் கொ... மேலும் பார்க்க

தாராபுரம்: மகளுக்குப் பாலியல் தொல்லை; விழிப்புணர்வு முகாம் மூலம் வெளியான உண்மை; தந்தை கைது

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் அண... மேலும் பார்க்க