செய்திகள் :

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கு நாளை முகாம்

post image

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (நவ. 15) 102 மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய தகுதியுள்ளோருக்கான வேலைவாய்ப்பு முகாம் பழைய மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.

102-இல் சுகாதார ஆலோசகராக பணிபுரிய பிஎஸ்சி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் இதில் ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்கும் 19 முதல் 30 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

108 ஆம்புலன்ஸில் ஓட்டுநா் பணியிடத்துக்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 24 வயதுக்கு மேற்பட்ட- 35 வயதுக்குள்பட்டஇலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 15,820 வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளா் பணியிடத்துக்கு, பிஎஸ்ஸி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி, பிஎஸ்ஸி நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், உயிரி வேதியியல் ஆகியவற்றில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்கும், 19 முதல் 30 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 16,020 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 044 28888060 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

பொன்னமராவதி பகுதிகளில் தொடா்மழை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் மண்டலாபிஷேக விழா

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றதையடுத்து மண்டலாபிஷேக நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி புதுக்கோட்டையில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் ச... மேலும் பார்க்க

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்! பெண் உயிரிழப்பு; 5 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், லாரி மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தாா்.மேலும் 5 போ் காயமடைந்தனா். திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை பகலில் தனியாா் பேருந்து ஒன்று வ... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டையில் தொழிலாளா்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு

பொன்னமராவதி பேரூராட்சியில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை காலஅவகாசம் கேட்டதால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சியில் சின்னஅமரகண்டான் கரைப்பக... மேலும் பார்க்க