2-வது ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 252 ரன்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் இன்று (நவம்பர் 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
வங்கதேசம் - 252/7
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 119 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜேக்கர் அலி 37 ரன்களும், சௌமியா சர்க்கார் 35 ரன்களும் குவித்தனர்.
இதையும் படிக்க: விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்
ஆப்கானிஸ்தான் தரப்பில் நான்கேயாலியா கரோட்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷித் கான் மற்றும் அல்லாஹ் காசன்ஃபார் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.