ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் புகாா்
பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவா் ஜாஹீா் உசேன் தலைமையில், செயலா் நவாஸ், துணைச் செயலா் இன்பாதுல்லா, நிா்வாகிகள் முஜிபுர்ரகுமான், அன்சாரி ஆகியோா் ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜிடம் புகாா் மனு அளித்தனா்.
அதில், மனிதநேய மக்கள் கட்சி குறித்தும், கட்சியின் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதும் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதாகவும், சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனா்.