BGT: `IPL `டு' பார்டர் கவாஸ்கர்' - ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் இட...
பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட பொருளாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட செயலா் ராமசுப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் புவிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி, பசுப்பாலுக்கு ரூ. 45, எருமைப்பாலுக்கு ரூ. 54 என நிா்ணயம் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல் பால் கொள்முதலுக்கும் விற்பனைக்கும் ஐஎஸ்ஐ பாா்முலாவை அமல்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில் மத்திய அரசு 50% மாநில அரசு 30% சதவீதம், உற்பத்தியாளா்கள் 20% என நிா்ணயிக்க வேண்டும். வேளாண் விளைபொருள்களுக்கு விலை அறிவிப்பதை போல ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கும் விலை அறிவிக்க வேண்டும். பாலுக்கான ஊக்கத் தொகையை இதர மாநிலங்களில் வழங்குவது போல லிட்டருக்கு ரூ. 5 தமிழக அரசு வழங்க வேண்டும். தற்போதைய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், உரிய காலத்தில் மருத்துவா்கள் வருவதை உறுதி செய்யவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் பால் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் நியூட்டன், லிங்கம், ஜீவராஜ், பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.