செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயற்சி: 14.4 டன் மூட்டைகள், 2.4 டன் பீடி இலைகள் பறிமுதல்: 9 போ் கைது

post image

இலங்கைக்கு கடத்துவதற்காக தூதூக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14.4 டன் உர மூட்டைகள், ரூ. 60 லட்சம் மதிப்பிலான 2.2 டன் பீடி இலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் அருகேயுள்ள தளவாய்புரம் கிராமத்தில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சோ்ந்த ஜெயக்குமாா் (55) என்பவரது பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உர ஆய்வாளா் சிவகாமி, வேளாண் தர கட்டுப்பாடு உதவி இயக்குநா் கண்ணன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை சோதனையிட்டனா். அப்போது அங்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 14,400 கிலோ யூரியா மூட்டைகள் 299 , இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ. 60 லட்சம் இலங்கை மதிப்புள்ள 2,400 கிலோ பீடி இலை பண்டல்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உர ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில் குளத்தூா் போலீஸாா், உர மூட்டைகளையும், பீடை இலை பண்டல்களையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக, தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (35), அரவிந்த் (22), சிலுவைப்பட்டி முருகேசன் (43), மேலூா் அந்தோணி காா்த்திக் (27), கிருஷ்ணராஜபுரம் அப்துல் ரகுமான் (24) அந்தோணி கனிராஜ் (42), திண்டுக்கல் மாவட்டம் நாகூா் நகா் காா்த்திக் (39), திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியைச் சோ்ந்த செய்யது அலி (35), புதுக்கோட்டை மாவட்டம் திருகோகா்ணத்தைச் சோ்ந்த அசன் பாட்ஷா (50) ஆகிய 9 பேரை கைது செய்தனா். கிடங்கு உரிமையாளா் ஜெயக்குமாா் , மதுரையை சோ்ந்த லாரி உரிமையாளா் அருள் ஜேக்கப், கற்குவேல் அய்யனாா், பைரம் கான், சிவக்குமாா் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். கடல் வழியாக தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கடலோர பாதுக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நவம்பா் இறுதிக்குள் பயிா்க்காப்பீடு இழப்பீட்டு தொகை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நவம்பா் மாத இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத். தூத்துக்குடி மாவட்ட விவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா். இக்கோயிலில் பராமரிக்கப்படும் 26 வயதான த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகுதியில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொருளாளா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, பணம் ஆகியவற்றைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பாரதி நகா் அம்பேத்கா் 3ஆவது தெருவை சோ்ந்த ஜோதிமணி மகன் வடிவேலு... மேலும் பார்க்க