ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?
200 திரைகளில் மறுவெளியீடான குஷி!
நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அழகான காதல் கதையாக உருவான இப்படத்தில் விஜய், ஜோதிகா கதாபாத்திரங்களும் நன்றாக எழுதப்பட்டிருந்தன.
இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், இப்படம் இன்று தமிழகத்தில் 200க்கும் அதிகமான திரைகளில் மறுவெளியீடாகியுள்ளது. விஜய்யின் கில்லி படம் மறுவெளியீட்டிலும் மிகப்பெரிய வசூலைப் பெற்றதுபோல் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: அச்சுறுத்தும் விமர்சகர்கள்... சர்ச்சையில் பிரேம் குமார்!