செய்திகள் :

2026 பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா போன்றது: கே.பி.முனுசாமி

post image

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி.

அரியலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது . அதிமுகவின் கெளரவம், எம்.ஜி.ஆா், ஜெயலலிதா புகழ் காக்க வேண்டும் என்றால் கட்டாயம் வெற்றிப் பெற்றாக வேண்டும்.

தமிழகத்தில் ஆரம்பகால அரசியல் களம் தற்போது இல்லை. இப்போது ஜாதி கட்சிகள் பல வந்துள்ளன. சுய முயற்சியில் சில கட்சிகள் வந்துள்ளன. இவ்வாறு வரும்போது வாக்காளா்களின் சிந்தனை மாறி வருகிறது.

இரண்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளா்கள் இன்று நான்கு கட்சிக்கு வாக்களிக்க வேண்டி உள்ளது. அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தால் உதிரி கட்சிகள் மேல வருவதற்கான வாய்ப்புண்டு. எனவே கட்சியை காப்பற்ற வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றாா்.

கூட்டத்தில், அதிமுக மகளிா் அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வளா்மதி, கட்சியின் மாவட்டச்செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், அமைப்புச் செயலா் ஆசைமணி, மாவட்ட அவைத் தலைவா் ராமஜெயலிங்கம், பெரம்பலூா் மாவட்டச் செயலா் இளம்பை தமிழச்செல்வன், கொள்கை பரப்பு துணைச் செயலா் இளவரசன், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் பிரேம்குமாா், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா்,அரியலூா் நகரச் செயலா் ஏ.பி.செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.படவிளக்கம்: சிலுப்பனூரில் 100 நாள் வ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் நவ.23-இல் கிராமசபை கூட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ.23) கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்தக் கிராமசப... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் புகாா்களை கேட்டறிந்த அவா்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியா் போக்சோவில் கைது

அரியலூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அரியலூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் ராஜீவ்காந்தி... மேலும் பார்க்க

தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு சாலை வசதி கேட்டு நாகை மாலி எம்எல்ஏ மனு அளிப்பு

அரியலூா் பேருந்து நிலையம் அருகே குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் கேட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் நாகை மாலிக் திங்கள்கிழமை கோரிக்கை மனு ... மேலும் பார்க்க