சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்
கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் பொழுதுபோக்கு இடமாக புதுச்சேரி இருக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக நீா் விளையாட்டு மற்றும் சாகசப் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக 21 புதிய படகுகளுக்கு சவாரி உரிமத்தை முதல்வா் ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். மேலும், 8 படகுகளுக்கு சவாரி உரிமம் புதுப்பிக்கப்பட்டது. 7 படகுகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. சட்டப்பேரவையில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.