செய்திகள் :

22 நாள்கள் பேட்டரி தாங்கும் திறன்! விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

post image

விவோ நிறுவனம் சிறந்த பேட்டரி திறனுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் நேற்று புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்த நிலையில், இன்று (ஏப். 22) விவோ நிறுவனம் அதிக நாள்கள் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, ஸ்மார்ட் வாட்ச்களையும் தயாரித்து வருகிறது.

அந்தவகையில் இன்று 1.43 அங்குல திரையுடன் கூடிய புதிய வாட்ச் -5ஐ அறிமுகம் செய்துள்ளது. விற்பனையில் தனித்துவமாக விளங்கும் வகையில், 22 நாள்கள் பேட்டரி திறன் கொண்டது.

இதையும் படிக்க | ஓப்போவுக்கு போட்டியாக விவோ அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்!

சிறப்புகள் என்னென்ன?

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதே நாளில், விவோவில் எக்ஸ் 200 அல்ட்ரா, எக்ஸ் 200 அல்ட்ரா எஸ் என்ற இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் வாட்ச், 1.43 அங்குல (3.63 செ.மீ.) திரை கொண்டது. திரையை அணைக்காமல், வெளிச்சத்துடன் வைத்திருந்தால்கூட 22 நாள்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம்.

எண்ணற்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியது. உடலில் ரத்த அழுத்தத்தை 30 விநாடிகளில் கணக்கிட்டு கூறும் வகையில் புளூ ஓஎஸ் 2.0. கொண்டுள்ளது. இதேபோன்று தூக்க நிலை மற்றும் இதயத் துடிப்புகளையும் கணக்கிடும் அம்சம் கொண்டது.

விலை எவ்வளவு?

புதிய ஸ்மாட் வாட்ச்சானது சிலிகானால் ஆன பட்டையுடன் வருகிறது. இதனால் இதன் விலை ரூ. 9300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே அம்சத்தில் தோல் பட்டையுடன் வேண்டுமானால் ரூ. 11,600 செலுத்த வேண்டும்.

இரு வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனை ஏப். 29 முதல் தொடங்கும்.

தற்போது முதல்கட்டமாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதையும் படிக்க | ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?

அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்ட... மேலும் பார்க்க

டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு!

டாடா கம்யூனிகேஷன்ஸ் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,040 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதன் முந்தைய மூன்று மாதங்களை விட 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. அதே வேளையில் அதன் வ... மேலும் பார்க்க

பட்ஜெட் விலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ! இந்தியாவில் கிடைக்குமா?

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கிடைக்ககூடிய ஸ்மார்ட்போனாக உள்ளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் தற்போது அறி... மேலும் பார்க்க

நாட்டின் 3வது பெரிய நிறுவனமாக மாறிய ஹெச்டிஎஃப்சி வங்கி!

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ரூ.15 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், நாட்டில் மூன்றாவது பெரிய இந்திய நிறுவனம் என்ற பெருமையை தட்டி சென்றது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்று... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.23-ஆக முடிவு!

மும்பை : இன்றைய வர்த்தக முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.23-ஆக முடிந்தது.தொடர்ந்து வரும் அந்நிய நிதியால் சென்செக்ஸ் மற்றும் ... மேலும் பார்க்க

6-வது நாளாக உயர்ந்து முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி டாப் 50 பங்குகள் கொண்ட குறியீடுகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்து முடிந்தது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை நேர வர்த்தகத்தி... மேலும் பார்க்க