செய்திகள் :

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

post image

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று, மாலை 4.30 மணியளவில் காக்கி உடையணிந்த 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஊருக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த தலித் சமூக மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில், 6 மாதங்கள் மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகள் உள்பட 24 தலித் சமூகத்தினர் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 19, 1981 அன்று உள்ளூரைச் சேர்ந்த லயிக் சிங் என்பவரால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை, கொள்ளை போன்ற வழக்குகளின் கீழ் குற்றவாளிகள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க | பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

இதில் 14 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலேயே உயிரிழந்தனர். அப்போதே ஒருவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விரிவான விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் ராதே உள்ளிட்ட கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 44 ஆண்டுகளுக்குப் பின்னர் உ.பி. மைன்புரி சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகள் கப்தான் சிங் (60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகியோருக்கு மரண தண்டனையுடன் தலா ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி இந்திரா சிங் இதற்கான உத்தரவைப் பிறபித்தார்.

தலித் சமூகத்தினர் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவிக்க தெஹுலியிலிருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள சாதுபூர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார்

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க