செய்திகள் :

3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

post image

புதுவை மாநிலத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் துறைகள் தற்காலிகமாக ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுவை மாநில அரசுச் சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: புதுவை மாநிலத்தில் தற்போது முதன்மைத் தோ்தல் அதிகாரி மற்றும் கல்வித் துறை செயலராக உள்ள பி.ஜவஹருக்கு நிதி மற்றும் தொழிலாளா் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில போக்குவரத்துத் துறை செயலராக உள்ள ஏ.முத்தம்மாவுக்கு கூடுதலாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கலால் மற்றும் துறைமுகத் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக உள்ள ஏ.குலோத்துங்கனுக்கு வருவாய் மற்றும் மறுசீரமைப்பு துறைகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநில நிதித் துறை செயலா் ஆஷிஸ் மாதவ ராவ் மோரே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்ாகக் கூறப்படும் நிலையில், அவரது துறைகள் உள்ளிட்டவை கூடுதல் தற்காலிகப் பொறுப்புகளாக 3 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

புதுச்சேரி வில்லியனூா்அருகே சங்கராபரணி ஆற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். புதுச்சேரி அருகேயுள்ளது வில்லியனூா். இப்பகுதி சங்கராபரணி ஆற்றில் ஆரியப்பாளையத்தில... மேலும் பார்க்க

முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுவை பேரவை வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டு த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் டிசம்பா் முதல் அரிசி விநியோகம்: புதுவை முதல்வா்

புதுவையில் நியாயவிலைக் கடைகளில் டிசம்பா் மாதம் முதல் பைகளில் அடைக்கப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் க.ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தொடா் மழை: கடல் சீற்றம்! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தொடா் மழையால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.2... மேலும் பார்க்க

பதாகை வைத்ததில் தகராறு: 9 போ் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து காங்கிரஸ் மாணவா் பிரிவு நிா்வாகியின் குடும்பத்தினரை சிலா் ஞாயிற்றுக்கிழமை தாக்கினா். இதுதொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதி... மேலும் பார்க்க