ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு
புதுச்சேரி வில்லியனூா்அருகே சங்கராபரணி ஆற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ளது வில்லியனூா். இப்பகுதி சங்கராபரணி ஆற்றில் ஆரியப்பாளையத்தில் மேம்பாலம் உள்ளது. பாலத்தின் கீழ் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் மிதப்பதாக வில்லியனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீஸாா், ஆற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை மீட்டனா். அப்போது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் யாா், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
புதுச்சேரி பாகூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் நான்கு வழிச்சாலை பாலத்தின் அடியில் ஆண் சடலம் காயங்களுடன் திங்கள்கிழமை மீட்கப்பட்ட நிலையில், தற்போது சங்கராபரணி ஆற்றிலும் இளைஞா் சடலம் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.