செய்திகள் :

3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

post image

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சி வரும் 18.03..2025 முதல் 20.03.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ட்ரோன் விதிமுறைகள் & ட்ரோன் தொழில்நுட்ப அறிமுகம், ட்ரோன் ஒளிப்பதிவு நுட்பங்கள், வான்வழி புகைப்படம் எடுத்தல் பற்றிய கண்ணோட்டம், FPV ஒளிப்பதிவு DGCA இன் கீழ் விமான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு போன்றவை கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இதையும் படிக்க: மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032. 8668108141 / 8668102600 / 7010143022.

முன்பதிவு அவசியம் என்றும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னா் ஆட்சி- ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். செங்கோட்டையில் அண்ணாதொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு மார்ச் 10-ல் உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுற... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மார்ச். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக... மேலும் பார்க்க

நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு: நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு பணப்பலன்கள் கோருவது தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

மாநிலங்களை ஒருங்கிணைத்து“கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படும் எனமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகள... மேலும் பார்க்க

மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக... மேலும் பார்க்க