செய்திகள் :

34 வயதில் முதியவர் வேடம்! - அற்புத நடிகரின் ஆச்சரியப்படுத்தும் ரெகார்ட் | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

கல்யாண சமையல் சாதம்

காய்கறிகளும் பிரமாதம் - அந்த

கௌரவ ப்ரசாதம்

இதுவே எனக்குப் போதும்!

ஹ ஹ ஹ ஹ  ஹ ஹ ஹ

   மாயா பஜார் (1957) படத்தில் வரும் இந்தப் பாடல் சினிமா உலகம் உள்ளளவும் நின்று நிலைக்கும். கடோத்கஜனாக நடித்த ரங்கராவ் அவர்களை மட்டும் மறந்து விடுமா என்ன?

 34 வயதில் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ (1952)படத்தில் சாவித்திரியின் தந்தையாக  60 வயது முதியவராக நடித்த இவர், அது போன்ற தோற்ற வேடங்களிலேயே தன் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஆனால் 56 வயதிலேயே அமரராகிப் போன இவரின் ‘சினி ரெகார்ட்’ வேறு எவராலுமே உடைத்திட முடியாதது!

  1938 ஜூலையில் கிருஷ்ணா மாவட்ட நுஸ்வித்தில் பிறந்த இவர், தன் இளங்கலை  அறிவியல் படிப்பை சென்னை இந்துக் கல்லூரியில் முடித்தார்.

எஸ்.வி.ரங்காராவ்

தெலுங்கு நடிகரான இவர் தன் தாய்மொழியில் நடித்த படங்களின் எண்ணிக்கையில் (109), பாதி எண்ணிக்கையில் (53) தமிழிலும் நடித்தார். இரண்டு தெலுங்கு படங்களை இயக்கியும், சில படங்களைத் தயாரித்தும் தன் பன்முகத் தன்மையைப் பறை சாற்றினார்.

எஸ்.வி.ரங்காராவ்

1949 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனதேசம்’என்ற அறிமுகத் தெலுங்குப்படம்  கைகொடுக்காது போனாலும்,1951ல் வெளியான ‘பாதாள பைரவி’ நல் படமாக அமைந்தது.

  சமூகப் படங்களில் மூத்த வயதான அண்ணன், அப்பா, தாத்தா வேடங்களே பெரும்பாலும்! கம்பீரமான இவர் உடல் வாகு அந்த வேடங்களுக்கு இவரைக் கச்சிதமாகப் பொருந்தச் செய்தது.

 உடைக்க முடியாத சினி ரெகார்ட் என்றோமே, அதற்குக் காரணம் இதுதான்.

புராணப் படங்களில் இவர் முக்கியப் பாத்திரங்களில் தோன்றி, அந்த  நாயகர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற எண்ணத்தை நம் உள்ளங்களில் விதைத்த உன்னத நடிகர் இவர்! எமக்குத் தெரிந்து, இத்தனை புராணக் கதாபாத்திரங்களில் வேறு எவரும் சோபித்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இடையே வேற்றுமையைக் காட்டவும் இவர் தவறவில்லை.

அந்தப் புராணக் கதாபாத்திரங்களே நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன!

எஸ்.வி.ரங்காராவ்,
  • ராவணன்

  • துரியோதனன்

  • பீஷ்மர்

  • கீசகன்

  • நரகாசுரன்

  • கம்சன்

  • உக்கிரசேனன்

  • எமன்

  • ஹிரண்யகசிபு

  • கடோத்கஜன்

இத்தோடு மட்டுமில்லை. வரலாற்றுக் கதாநாயகர் அக்பராகவும் திரையில் ஆட்சி புரிந்திருக்கிறார்.

இவர் இயக்கிய இரண்டு தெலுங்குப் படங்களுமே ஆந்திர அரசின் ‘நந்தி’ விருதைப் பெற்றன! இவர் திரைத் துறைக்காற்றிய பங்கை மெச்சி, மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு இவர் தலை பொறித்த தபால் ஸ்டாம்பை வெளியிட்டது. மேலும் பல விருதுகளும் இவரைத் தேடி வந்தன.

இவரின் சோக நடிப்பைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.1974 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ‘அன்புச் சகோதர்கள்’ படத்தில் மூன்று தம்பிகளுடன் முத்தான குடும்பத்தில் இவர் வாழ்ந்து காட்டியதை, அண்ணன்-தம்பிகளுடன் பிறந்த எவராலும் மறக்கவே முடியாது!

எஸ்.வி.ரங்காராவ்

முத்துக்கு முத்தாக

சொத்துக்குச் சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்குக் கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக…

இந்தப் பாடலைக் கேட்கையில் கண்கள் மழைக்காலக் குளமாகின்றன!

மனத்துள் எஸ்.வி.ஆர்.ஸ்லோ மோஷனில் கம்பீரமாக நடக்கிறார்!

இத்தனை புராண, இதிகாச, வரலாற்று நாயகர்களாய் திரையில் இவர் வாழ்ந்து காட்டியதால்தானோ என்னவோ, பழம் பாடல் கூறியவாறு இவர் 56 வயதிலேயே இறந்து போனாரோ?!பாடல் தெரியுமல்லவா?

ஓரெட்டில் ஆடாத ஆட்டம் ஆட்டமல்ல!

ஈரெட்டில் கற்காத கல்வி கல்வியல்ல!

மூவெட்டில் செய்யாத திருமணம் திருமணமல்ல!

நாலெட்டில் பிறக்காத குழந்தை குழந்தையல்ல!

ஐயெட்டில் சேர்க்காத சொத்து சொத்தல்ல!

ஆறெட்டில் கிடைக்காத புகழ் புகழல்ல!

ஏழெட்டில் சாவாத சாவு சாவல்ல!

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Pushpa: `அப்ப சாமி இப்ப ஃபீலிங்ஸு; பான் இந்தியா சிங்கரா மாத்தினது புஷ்பா தான்’ - ராஜலட்சுமி செந்தில்

'புஷ்பா 2' வில் 'ஒருவாட்டி...ஒருவாட்டி... பீலிங்க்ஸ்' பாடல்தான் தற்போது 'பல'வாட்டி கேட்க தூண்டிக்கொண்டிருக்கும் ஹார்ட் ஃபயரிங் பாடல்.'புஷ்பா' படத்தில் 'சாமி சாமி' செம்ம வைரல் பாடலைப் பாடி ட்ரெண்டிங் த... மேலும் பார்க்க

Aadhi Kalaikol 2024: 'பாரம்பர்ய உணவு, நாட்டார் கலைகள்...' - களைகட்டிய ஆதி கலைக்கோல்! | Photo Album

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்... https://bit.ly/MadrasNallaMa... மேலும் பார்க்க

Shobitha Shivanna: சடலமாக மீட்கப்பட்ட கன்னட நடிகை; தற்கொலையா... கொலையா? - விசாரணையில் காவல்துறை!

பிரபல கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (30). இவர் கன்னடத்தில் Eradondla Mooru, ATM: Attempt to Murder, Vandana போன்ற பல்வேறு படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர். இது தவிர காலிபட்டா, மங்கள கௌரி உள்... மேலும் பார்க்க

Keerthi Suresh: கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் - நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் மாப்பிள்ளை ஆகிறார்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என கோலிவுட்டில் தகவல் பரபரக்கிறது. ’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்... மேலும் பார்க்க

என்னை பாதித்த அசாமி திரைப்படம்... பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க