செய்திகள் :

4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை

post image

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.  தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை விளை நிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.

ரோலக்ஸ் யானை

அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர். இந்த யானையால் மனித உயிர்களுக்கு சேதங்களும் ஏற்பட்டதால், அதை பிடிக்க சொல்லி விவசாயிகளும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2 மாதங்களாக ரோலக்ஸ் யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகளும், முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசிம், பொம்மன் கும்கி யானைகளும் அழைத்து வரப்பட்டன.

ரோலக்ஸ் யானை

மருத்துவர்கள் வெண்ணிலா, கலைவாணன், ராஜேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று இரவு தொண்டாமுத்தூர் இச்சுக்குழி பகுதியில் யானை சுற்றி வந்துள்ளது.

அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பிறகு வனத்துறையினர் அந்த யானைக்கு கயிறு கட்டி, காலை 7 மணியளவில் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினார்கள்.

ரோலக்ஸ் யானை
ரோலக்ஸ் யானை

ரோலக்ஸ் யானையை ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் உள்ள வரகளியார் முகாமிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அந்த யானையை கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

TVK: கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அளித்த தவெக; வங்கியில் நேரடி டெபாசிட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.அன்றிரவே இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" - டிடிவி தினகரன் சந்தேகம்

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க அந்தக் கூட்டணிக்குள் வந்தத... மேலும் பார்க்க

"இந்து பெண்கள் ஜிம்மிற்குச் செல்லாதீர்; வீட்டில் யோகா செய்யுங்கள்" - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த் பட... மேலும் பார்க்க