செய்திகள் :

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அவரகால மைய எண்கள் அறிவிப்பு!

post image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (நவ.26) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன-

22.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய தேதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன.

மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட 

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப.,  (94999 56205, 88006 56753)

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவிதா ராமு, இ.ஆ.ப., (90032 97303)

திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., (73388 50002)

கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ. ராமன், இ.ஆ.ப., (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

இதையும் படிக்க: சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து! தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சக்திகாந்த தாஸ் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நெஞ்செரிச்சல் காரணமாக, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை! - மத்திய அரசு பதில்

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தத... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 26) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், கோயம்பேடு, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

அரசியலமைப்பு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்பு!

அரசியலமைப்பு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான நவ. 26 ஆம் தே... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

ராஜிநாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா செய்துள்ளார். மேலும் பார்க்க