செய்திகள் :

`5, 8-ம் வகுப்புகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது' - No-detention Policy-யை ரத்து செய்த மத்திய அரசு

post image
பள்ளி கல்வியில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையான no-detention policy-யை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.

இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படாமல் அதே வகுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

School Student

கல்வி உரிமைச் சட்டத்தில் (Right to Education Act) 2019-ல் மத்திய அரசு கொண்டுவந்த இந்த திருத்தத்தை ஏற்கெனவே 16 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் வகையில் மத்திய அரசு இதை ரத்து செய்திருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளர், ``மத்திய கல்வி அமைச்சகம் ஒரு பெரிய முடிவாக, no-detention policy-யை ரத்து செய்திருக்கிறது. 5, 8-ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்கள், இரண்டு மாதங்களுக்குள் தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு உண்டு. அதிலும் தேர்ச்சிபெறாவிட்டால் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள். அதேசமயம், 8-ம் வகுப்பு வரை யாரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள். குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது." என்று கூறினார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

``அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்" - தமிழக அரசு அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் எனப் பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்... மேலும் பார்க்க

`கமிஷன் தொகை எங்க?'- வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்; வைரல் வீடியோவால் பரபரப்பு

தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக 9 கவுன்சிலர்கள் உள்ளனர். இங்கு ஒன்றியக்குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பணியாற்றி வருகிறார். தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 9 கவுன்ச... மேலும் பார்க்க

TNEB: 'தாமதமாகும் ரீடிங்... அப்டேட் ஆகாத மீட்டர்கள்... பாதிப்பு மக்களுக்கு' - தீர்வு என்ன?!

'நாங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தமாட்டோம்' என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்தப் பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. அதற்கு மத்திய அரசு மற்றும் ஆட்சியில் முன்னால் இருந்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரி முத்தூர் பகுதியில், 1-வது வார்டில் அமைந்துள்ளது மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்பு - நடந்தது என்ன?

தமிழக எல்லையில் உள்ள குமுளி அருகே தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கண்காணிப்புக்காக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்ப... மேலும் பார்க்க

Ranil : திடீர் இந்திய பயணம்; 4 நாள்கள் ஊட்டியில் தங்கும் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க,1994-ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கி 6 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர். கடந்த 2022- ம் ஆண்டு இலங்க... மேலும் பார்க்க