செய்திகள் :

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கல்!

post image

2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ரூ. 90 லட்சத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (18.11.2024) 2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், இன்றைக்கு ஒன்பது தமிழறிஞர்களுக்கான நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, நினைவில் வாழக்கூடிய கவிஞர்களுடைய குடும்பத்தாருக்கு அவர்களுடைய மரபுரிமை வாரிசுதாரர்களுக்கு இந்த விருதுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க: ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..

அவர்களும் நீண்ட நாள்களாக இந்த விருதுகளை எதிர்ப்பார்த்திருந்தார்கள். அரசு, தங்கள் குடும்பத்தார் கவிஞர்கள் எழுதிய நூல்களை எல்லாம் நாட்டுமையாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை முதலமைச்சர் ஸ்டாலின், அந்த எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தில் அறிவிப்பிற்கிணங்க இன்றைக்கு அதை நாட்டுமையாக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுத் தொகை தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், அவர்கள் எல்லாம் அந்த விருதுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நாட்டுடமையாக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும், மேலும் தமிழ் மொழியை செம்மைப்படுத்துகின்ற வகையிலும் முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, இன்றைக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தம... மேலும் பார்க்க

மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!

மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திரு... மேலும் பார்க்க

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு!

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையி... மேலும் பார்க்க

டிச. 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வரும் டிச. 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாகா்கோவில் கோட்டாறு தூயசவேரியார்ஆலயத் திருவிழாவினையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச. 3 ஆம் தேதி உள்ளூர் வி... மேலும் பார்க்க

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும்: ராகுல் காந்தி

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள ... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சுந்தரி தொடர் நாயகி!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா, தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமை... மேலும் பார்க்க