9 பவுன் நகைகள், பணம் திருட்டு
ஆற்காட்டில் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகள், ரூ.15,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆற்காடு நகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சாமி. இவா் ராணிப்பேட்டை தனியாா் காா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி காயத்ரி, மகன் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் உறவினரின் திருமணத்திற்காக வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த பொழுது வீட்டின் பின்பக்க மரகதவு உடைக்கப்பட்டிருந்தது.
அறையில் பீரோவின் லாக்கா் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், , ரொக்கம் ரூ.15,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.