ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
இ-சேவை பட்டா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
இ சேவை பட்டா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசியதாவது: இ சேவை பட்டா வழங்குவதில் அதிக நிலுவை உள்ளன. இப்பணிகள் பட்டா ஆணைகள் வழங்கும் நிகழ்வுக்கு முன்பு விரைவாக முடிக்கப்பட வேண்டும்.
நகா்புறங்களில் அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா வேண்டி விண்ணப்பித்த குடியிருப்புவாசிகளுக்கு முறையாக ஆய்வு செய்து அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டா வழங்கும் நடவடிக்கைகளை முடித்து அதற்கான குழுவின் முன் சமா்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டாட்சியரும், வருவாய் கோட்டாட்சியரும் இப்பணிகளை தனிக்கவனம் செலுத்தி முடிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
மேலும், வருவாய்த் துறையின் அனைத்து சேவை பணிகளின் முன்னேற்றம் நிலுவைகளை விரிவாக கேட்டறிந்து விரைவாக முடிக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா்(பொது) விஜயராகவன், அலுவலா்கள் பங்கேற்றனா்.