குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
ராணிப்பேட்டை காரை பகுதியைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (எ) சாதிக்பாஷா( 55). இவரை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஒராண்டு குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகல் இம்மானுவேலிடம் வழங்கப்பட்டது.