செய்திகள் :

ADMK: "விருதுநகருக்கு மூன்று அமைச்சர்கள் லட்சியம்; ஒரு அமைச்சர் நிச்சயம்!" - ஆர்.பி.உதயகுமார் உறுதி

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

ஆர்.பி. உதயகுமார் - அ.தி.மு.க

நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டாம் என்று சபாநாயகர் கூறும் போதும், 11 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்தது ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். சாத்தான் வேதம் ஓதுகிறது எனக் கூறுகிறார்கள். யார் விசுவாசத்தைப் பற்றிப் பேசுவது? யார் துரோகத்தைப் பற்றிப் பேசுவது? ஆண்டிபட்டி தொகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி.

ஆனால் அந்தத் தொகுதியில் இரட்டை இலை அ.தி.மு.க., சதியால் தோற்கடிக்கப்பட்டது சூழ்ச்சி. இந்த லட்சணத்தில் அவர் எப்படி கட்சிக்குத் தலைவராக இருக்க முடியும். தலைவராக இருக்கும் நபர் தோற்றபிறகு, அவரைப் பல்லாக்கில் வைத்துச் சுமக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் ஒருநாளும் தயாராக இருக்க மாட்டான். முதலமைச்சர் வேட்பாளர் தோற்றுவிட்டால், கட்சி ஒருங்கிணைப்பாளரான நாம் கட்சியைக் கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்த துரோகத்திற்கு, ஜெயலலிதாவின் ஆன்மா சம்பட்டி அடி கொடுத்துள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

செய்வதையெல்லாம் செய்துவிட்டு 'யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து உள்ளே வை' என்பதுபோல் பேசுகிறார்கள். துரோகத்தின் மொத்த உருவமே ஓ.பன்னீர்செல்வம்தான். அவர், இன்னும் நிறைய அனுபவிப்பார். விருதுநகரில் உள்ள ஏழு தொகுதியிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெற்றால் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்கள் கொடுக்க வேண்டுமென்பது லட்சியம். ஒரு அமைச்சர் நிச்சயம்" என உறுதியாகக் கூறுகிறேன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

காமராஜர் குறித்து `சர்ச்சை கருத்து' தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி; கொதித்த காங்கிரஸ், தமிழிசை

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத... மேலும் பார்க்க

Stalin: "சென்னை வருகிறேன் என்றார்; வந்தார். ஆனால்..." - முரசொலி செல்வம் குறித்து ஸ்டாலின் உருக்கம்

கடந்த 10 ஆம் தேதி முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் காலமானார்.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நேற்று (21.10.202... மேலும் பார்க்க

Elon Musk: "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; ஏனென்றால்.." - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நீங்கள் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க்.உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த... மேலும் பார்க்க

கேரளா: பத்மநாப சுவாமி கோவிலில் பூஜை உருளி திருட்டு; ஆஸ்திரேலிய மருத்துவர் மீது வழக்கு; நடந்தது என்ன?

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமிகோயில் ஆகும். திருவிதாங்கூர் மன்னர்ஆட்சிக்காலத்தில் அவர்களது குலதெய்வமாக வழிபட்டு வந்த ஸ்ரீபத்மநாபசுவாமிகோயிலில், மூலவர் சு... மேலும் பார்க்க

குடியாத்தம்: கிழித்து நீக்கப்பட்ட தவெக போஸ்டர்கள் - ஆளும் தரப்பு மீது கடுகடுக்கும் நிர்வாகிகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) `முதல் மாநாடு’ வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது.தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் அத்தியாயத்துக்கான முதல் ... மேலும் பார்க்க

TamilNadu Train Accident - திட்டமிட்ட சதியா? நடந்தது என்ன?

கவரப்பேட்டையில் நடந்த தமிழ்நாடு ரயில் விபத்து இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த குறிப்பிட்ட ரயில் விபத்து குறித்து, மனித நாசவேலைகள் குறித்து ரயில... மேலும் பார்க்க