Lokah Chapter 1: தீபாவளிக்கு 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ்; வெளியான மோலிவுட் அப்டேட்!
Arasan: `புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள்’ - அனிருத்தை வாழ்த்திய சிம்பு
சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' திரைப்படம் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன் தொடர்புடையது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களிடமும், திரைப்பட ஆர்வலர்களிடமும் இந்தப் படம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்கம் மற்றும் யூட்யூப் என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு புரோமோ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு.

நேற்று இரவு, திரையரங்குகளில் `அரசன்' படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இன்று யூட்யூபில் வெளியாகும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இயக்குநர் நெல்சனும் இந்த புரோமோவில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் புரோமோவில் தனுஷ் ரெஃபரென்ஸ் வைத்திருப்பதை ஹைலைட் விஷயமாக ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தன் எக்ஸ் பக்கத்தில், ``உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி. முதல்முறையாக என் அன்புக்குரிய சிம்பு மற்றும் வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் இணைந்திருக்கிறேன். நன்றிகள்" எனப் பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தன் எக்ஸ் பக்கத்தில், ``என் அன்பான அனி, இறுதியாக நம் கூட்டணியும் நிறைவேறிவிட்டது. அரசன் புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள். எல்லாவற்றிற்கும் முன்கூட்டியே வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராக்ஸ்டார். கடவுள் ஆசிர்வதிப்பாராக" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.