செய்திகள் :

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

post image

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நான்கு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலையில் குஜராத் சிறையில் இருக்கும் மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் ஈடுபட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கர்ஜத் என்ற இடத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபா சித்திக்கை கொலை செய்தவர்களுக்கு துப்பாக்கியை கொடுத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. பாபா சித்திக் கொலைக்கு பிறகு இவர்கள் 5 பேரும் கர்ஜத்தில் பதுங்கி இருந்தனர்.

கைதானவர்கள்

கைது செய்யப்பட்ட நிதின் சாப்ரே, சாம்பாஜி, ராம் கனோஜியா, பிரதீப், சேதன் ஆகிய 5 பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாபா சித்திக்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியா, துருக்கி மற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை இவர்கள் தான் கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் பாபா சித்திக்கை கொலை செய்தவர்களுக்கு தங்கும் வசதி, பண உதவிகள் செய்து கொடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி அருண் தோரட் கூறுகையில்,''கொலையாளிகள் தர்மராஜ் மற்றும் சிவ்குமார் கெளதம் ஆகியோர் கொலை செய்வதற்கு முன்பு கர்ஜத் வந்து 5 பேரையும் சந்தித்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் துப்பாக்கி மற்றும் பணம் கொடுத்து உதவி இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்த ஐந்து பேரைத்தான் கொலைக்கு பயன்படுத்த திட்டமிட்டனர். ஆனால் இவர்கள் பின் விளைவுகளை புரிந்து கொண்டு பின் வாங்கிவிட்டனர். அதன் பிறகுதான் வடமாநிலத்தில் இருந்து கொலையாளிகளை அழைத்து வந்தனர்''என்று தெரிவித்தார்.

பாபா சித்திக், லாரன்ஸ் பிஷ்னோய்

தற்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து இக்கொலையில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாபா சித்திக் படுகொலையை தொடர்ந்து அவரத் மகன் சீசன் சித்திக்கிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து சல்மான் கான் புதிதாக துபாயில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் மற்றொரு குண்டு துளைக்காத காரை விலைக்கு வாங்கி இருக்கிறார். வெளியில் செல்லும்போது சல்மான் கான் எப்போதும் குண்டு துளைக்காத காரையே பயன்படுத்துகிறார்.

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க

ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆற... மேலும் பார்க்க

2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை - சேலத்தில் சோகம்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ... மேலும் பார்க்க

`ஆபரேஷன் அகழி' : சாவி தர மறுப்பு; கிரேன் மூலம் லாக்கரையே தூக்கிய போலீஸ் - திருச்சியில் நடந்தது என்ன?

ஆபரேஷன் அகழிதிருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி மா... மேலும் பார்க்க