செய்திகள் :

Basics of Share Market 9: `ஷார்ட் செல்லிங் (Short Selling)' என்றால் என்ன?!

post image

டிரேடிங் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், நிச்சயம் 'ஷார்ட் செல்லிங்' பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். இது முக்கியமான கான்செப்ட் என்பதற்காக மட்டுமல்ல...இது வித்தியாசமான கான்செப்டும்கூட.

ஒரு பொருளை வாங்கி, பின்னர் விற்பது வணிகம் எனப்படும். ஆனால், 'ஷார்ட் செல்லிங்'கை பொறுத்தவரை, முதலில் விற்போம்...பின்னர் வாங்குவோம். ஒருவேளை தவறாக படித்துவிட்டோமோ என்று குழம்பாதீர்கள்...சரியாக தான் படித்திருக்கிறீர்கள். சரி...சுற்றி வளைக்காமல், தெளிவாக பார்ப்போம் வாங்க...

ஒரு பங்கின் விலை ஏறுமா...இறங்குமா?

ஒரு பங்கின் விலை ஏறுமா... இறங்குமா? என்று ஆய்வு செய்து, ஒரு பங்கை வாங்குவதுதான் டிரேடிங். நீங்கள் அப்படி ஆய்வு செய்யும்போது, ஒரு பங்கின் விலை வருங்காலத்தில் குறையும் என்று தெரிந்துகொள்கிறீர்கள் என்றால், அங்கே 'ஷார்ட் செல்லிங்'கை தொடங்கலாம்.

எந்த நிறுவனத்தின் பங்கு விலை குறையப்போகிறதோ, அந்தப் பங்கை பிரோக்கர்கள் மூலம் முதலில் கடன் வாங்குவோம். பின்னர், அப்போது அந்த பங்கு விற்கும் விலைக்கு, அதை வேறு யாரிடமாவது விற்றுவிடுவோம். உதாரணத்திற்கு, அந்தப் பங்கின் விலை இப்போது ரூ.100 என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு வாரத்திற்கு பிறகு, அந்த பங்கின் விலை ரூ.80 ஆக குறைகிறது. கடன் வாங்கியதை திரும்ப தந்து தானே ஆக வேண்டும். அப்படி பார்க்கும்போது, விற்ற அந்த நிறுவனத்தின் பங்கை ரூ.80-க்கு வாங்கி, கடன் வாங்கிய பிரோக்கரிடமே திரும்ப தந்துவிடுவோம். ஆரம்பத்தில் ரூ.100-க்கு விற்று இருப்போம். இப்போது ரூ.80-க்கு வாங்கி இருக்கிறோம். இப்போது கணக்கு போட்டு பாருங்கள் நமக்கு ரூ.20 லாபம் கிடைக்கிறது.

ஷார்ட் செல்லிங் ஜாக்கிரதை!

'இது சட்ட ரீதியாக சரியா?' என்ற யோசனை வருகிறதா...இந்த கான்செப்ட் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் சட்ட ரீதியானது தான். ஆனால், நேற்றைய அத்தியாயத்தில் சொன்னது மாதிரி, இதுவும் பெரிய பெரிய ரிஸ்க் தான். ஒருவேளை, அந்த பங்கின் விலை குறையாமல், எகிறிவிட்டது என்றால், மிகப் பெரிய சிக்கல் ஆகிவிடும். அதனால், ஷார்ட் செல்லிங்கில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால், பங்குச்சந்தையில் எல்.கே.ஜி ஸ்டேஜில் இருப்பவர்கள் நிச்சயம் இதில் ஈடுபடவே கூடாது.

நாளை: CAGR, ஸ்குயர் ஆஃப், ஸ்டாப் லாஸ் - இன்னும் பல...

BAJAJ FINANCE பங்கு 5% ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா? | IPS FINANCE | EPI - 47

இந்த வீடியோவில், BAJAJ FINANCE இல் 5% அதிகரிப்பு பற்றி ஆராய்ந்து அதன் சாத்தியமான எதிர்கால விலை நகர்வுகளைப் பற்றி விவாதிக்கிறோம். IPS FINANCE மற்றும் EPI - 47 பற்றிய விரிவான பகுப்பாய்வை நாங்கள் வழங்குக... மேலும் பார்க்க

Hyundai Motor India பங்கை வைத்துக் கொள்ளலாமா? | SIP முறையில் Public Sector Bank பங்குகளை வாங்கலாமா?

ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் முதலீடு செய்வது அதன் வலுவான சந்தை நிலை மற்றும் ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி சாத்தியம் காரணமாக ஒரு நம்பிக்கைக்குரிய விருப்பமாக இருக்கலாம். மறுபுறம், பொதுத்துறை வங்கிப் பங... மேலும் பார்க்க

ரூ.176 கோடி லாபம் பார்த்த நிறுவனம்... எது தெரியுமா? | IPS FINANCE | EPI - 46

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 24, 472 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 80, 220 புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு. இதுகுறித்து பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் ... மேலும் பார்க்க

Basics of Share Market 8: டிரேடிங்கில் `லீவரேஜ்' (Leverage) என்றால் என்ன?

டிரேடிங் என்பது சிலருக்குத் தொழில்... சிலருக்கு இரண்டாவது வருமானம் என்றும், காசு போட்டு காசு எடுப்பது தான் டிரேடிங் என்றும் நேற்றைய அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், தொழில் என்றால் 'முதல்' போட வேண்டும... மேலும் பார்க்க

Basics of Share Market 7 : பங்குச்சந்தையில் 'டிரேடிங்' என்றால் என்ன? | Trading

'ஷேர் மார்க்கெட்ல இன்னைக்கு காலைல இவ்ளோ காசு போட்டேன்... இப்போ இவ்ளோ சம்பாதிச்சுட்டேன்' என்று நிறைய பேர் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால், கடந்த அத்தியாயத்தில் 'பங்குச்சந்தை நீண்ட கால முதலீட்டுக்குத்தான்... மேலும் பார்க்க