BB Tamil 9 Day 14: `பர்சனல் விஷயங்களை வச்சு...' வறுத்தெடுத்த வி.சே - ரணகள வீக்கெ...
BB Tamil 9: ``திருமண நாள்தான் பெரிய பண்டிகை; அவர் இல்லாதது கஷ்டமா இருக்கு!'' - வினோத் மனைவி பாக்யா
விஜய் டிவீயில் இரண்டு வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.
வி.ஜெ. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.
நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் வெளியேறி விட்டதாக தெரிகிறது.
பிரவீன் காந்தியும் அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறியுள்ளனர்.

போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவரையிலான நிலவரப்படி இப்போது பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களிலேயே அதிகம் பேசப்படுகிறவர்களாக இருப்பவர்கள் வாட்டர்மெலன் திவாகரும் கானா வினோத்தும்தான்.
இத்தனைக்கும் கானா வினோத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு பின்னணியில் பணி புரிந்திருந்தாலும் இப்போதுதான் ஆன் ஸ்க்ரீனில் முகம் காட்டுகிறார். வாட்டர்மெலன் திவாகருக்கோ பிக்பாஸ் செல்லும் முன் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானவர்.

இந்தச் சூழலில் கானா வினோத்துக்கு நேற்று முன் தினம் திருமண நாள். வினோத்தின் மனைவி பாக்யாவிடம் பேசினோம்.
’’அவருக்கு பூர்வீகம் ராயபுரம். எனக்கு வியாசர்பாடி. எங்க ஏரியாவுல கானா பிரபலம். அந்த கானாதான் என்னை அவருடைய ரசிகையாக்குச்சு. ஏதாவதொரு விஷயத்தைச் சொல்லி பாட்டு வேணும்னா அவ்வளவு சீக்கிரத்துல பாட்டு எழுதி பாடி பாட்டாக் கொடுத்துடுவார்.
அதுலயும் அவருடைய வரிகள் நக்கல், நையாண்டி, கூடவே கருத்துன்னு செமயா இருக்கும். அதுல மயங்கிதான் காதலைச் சொன்னேன். அவருக்கும் என்னைப் பிடிச்சிருந்ததால் சில வருடங்கள் காதலிச்சோம். பிறகு ரெண்டு பேர் வீட்டுலயும் பெரியவங்க கிட்ட சம்மதம் வாங்கி கோவிட் சமயத்துல எங்க கல்யாணம் நடந்திச்சு. இப்ப பிரக்யா, ஸ்ரேயாஸ்னு ரெண்டு குழந்தைக. கடவுள் ஆசீர்வாதத்துல வாழ்க்கை நல்லபடியா போயிட்டிருக்கு’’ என்றவரிடம் ’பிக்பாஸ்’ குறித்துக் கேட்டோம்.

‘’விஜய் டிவி நிகழ்ச்சிகள்ல ஏற்கனவே ஒர்க் பண்ணிட்டிருந்தார். சினிமாவுல கூட மெரினா, கெத்து முதலான சில படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கார். கானா பாட்டு மட்டும்னு இல்லாம சாதாரண பாடலக்ளையும் எழுதுவார்.
விஜய் டிவியுடன் ஏற்கனவே இருந்த தொடர்புலதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. குழந்தைக ரெண்டு பேரும் சின்னவங்களா இருக்கறதால விட்டுட்டு இருக்க முடியுமானு யோச்சார். நாந்தான் ‘பாத்துக்கறேன், நீங்க போயிட்டு வாங்க’னு சொன்னேன்.
கொஞ்சம் குழப்பத்தோடதான் போனார். ஆனா இப்ப அங்க நல்ல பேர் எடுத்துட்டு வர்றார்னு நினைக்கிறேன்.
இப்ப வீட்டுல தினமும் பிக்பாஸ் பார்த்துட்டு வர்றோம். அவரு எந்த இடத்துக்கு போனாலும் தன்னுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் தராம அந்த இடத்து சூழலுகு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிடுவார்.

அதேநேரம் இயல்பான கேரக்டருக்கு எதிரா கேமராவுக்காக எதையும் செய்ய விரும்ப மாட்டார். அதனால நீங்க பார்க்கற வினோத்தான் என்னுடைய நிஜமான வினோத்தும் கூட. அதனாலயே பிக்பாஸ் ரசிகர்களுக்கு அவரைப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.
நூறு நாளும் அந்த வீட்டுல இருந்துடுவார்னு எனக்குத் தோணுது. மத்தபடி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு’’ என்றார்.

திருமண நாள் வந்ததாமே, வாழ்த்துக்கள்’ என்றோம்.
‘ஆமா அவர் பக்கத்துல இல்லாததுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. ஒவ்வொரு திருமண நாளும் ஏதாவது பரிசு வாங்கி வந்து சர்ப்ரைஸ் பண்ணுவார். பிக்பாஸ் வீட்டுல அவர் எடுத்துட்டு வர்ற நல்ல பெயரையே இந்த வருஷ திருமண நாள் பரிசா நினைச்சுக்கப் போறேன்’ என முடித்தார் பாக்யா வினோத்.