தேனி: வரலாறு காணாத கனமழை... வெள்ளக்காடான பகுதிகள்! | Photo Album
Bison: ``தோல்வியடைந்துவிட்டால் ஊருக்கு வரமாட்டேன் எனச் சொன்னேன்!" - வைரலாகும் ராஜரத்தினத்தின் பேட்டி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் ̀பைசன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை திரைப்படமாக கொண்டு வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
1994-ல், ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய - பாகிஸ்தான் இடையிலான போட்டி பிரச்னையாகி, இரு அணிகளும் சமன் புள்ளிகளை எடுத்திருந்த நிலையில் போட்டி கைவிடப்பட்ட சம்பவம் பலரும் அறிந்ததே!

இந்தச் சம்பவத்தையும் ̀பைசன்' படத்தில் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம் முன்பு தூர்தர்ஷனுக்கு அளித்தப் பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் ராஜரத்தினம், ̀̀ ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரீமேட்ச் கேட்கும்போது, இந்திய அமைச்சகம் ̀மறுபடியும் ரீமேட் கேட்கிறீர்களே, ஒருவேளை தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது?' எனக் கேட்டார்கள். அதற்கு நான் தோல்வியடைந்துவிட்டால் மறுபடியும் நான் ஊருக்கு வரமாட்டேன். 22-வது மாடியில் அப்போது நான் தங்கியிருந்தேன்.

நான் கீழே விழுந்து இறந்துவிடுவேன். திரும்ப ஊருக்கு வரமாட்டேன் எனச் சொன்னேன். இதை நான் வெளிப்படையாகவே சொன்னேன். நாங்கள் பெரிய டீம். மறுபடியும் பாகிஸ்தானிடம் ரீமேட்ச் கேட்டு, போட்டியில் வெற்றி பெற்றோம். அது பெரிய நிகழ்வு!" எனப் பகிர்ந்திருந்தார்.