Bihar Election: Amit shah-க்கு PK சர்ப்ரைஸ், Stalin Alert! | Elangovan Explains
Bison: "உங்கள் உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது மாரி" - வாழ்த்திய ரஜினிகாந்த்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் பைசன். கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
துருவ் விக்ரமுடன் நடித்த பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர் உள்ளிட்ட நடிகர்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றனர். திரையுலகினரும் பைசன் படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பைசன் திரைப்படத்தைப் பார்த்த மூத்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித்தைத் தொலைபேசியில் வாழ்த்தியுள்ளார்.
Bison - ரஜினிகாந்த் வாழ்த்து!
"சூப்பர் மாரி சூப்பர்... பைசன் பார்த்தேன், படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" என ரஜினிகாந்த் வாழ்த்தியதாக மாரி செல்வராஜ் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"சூப்பர் ஸ்டாருக்கு நன்றி"
மேலும் தன்னையும் தயாரிப்பாளர் ரஞ்சித்தையும் வாழ்த்தியதற்காக நன்றி கூறும் வகையில், "பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளார் மாரி செல்வராஜ்.