செய்திகள் :

Diploma/ Degree படித்தவர்களுக்கு NLC -ல் உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி!

post image

Diploma/ Degree படித்தவர்களுக்கு, பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான NLC நிறுவனத்தில் உதவித்தொகையுடன் 1 வருட பயிற்சி வழங்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்கள்:

1.பயிற்சியின் பெயர்: Graduate Apprenticeship Training

பயிற்சி இடங்கள்: 171

உதவித்தொகை: 12,524 (B. Pharm படித்தவர்களுக்கு ரூ.15,028)

 2. பயிற்சியின் பெயர் : Diploma Apprentice.

காலியிடங்கள்: 29

உதவித்தொகை: ரூ.12,524

2020-ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள், காலியிடப் பகிர்வு, கல்வித்தகுதி ஆகியவை கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

www.nlcindia.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் 06.11.2024 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு 13.11.2024 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

The General Manager,

 Learning and Development Centre,

 Block-20, NLC India Ltd, Neyveli-607803

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத் தேர்வு 25.11.2024 முதல்  30.11.2024 நடைபெறும்.

சம்மந்தப்பட்ட படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

11.12.2024 முதல் பயிற்சி ஆரம்பமாகும்.

மேலும் முழு விவரங்களுக்கு (Advt. No.L&DC.3B /2024) லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிக்கையை படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

முக்கிய இணைய இணைப்புகள் :

Apply online (Graduates and Technician Apprentices).

Format for arriving.percentage of marks.

Detailed Advertisement