Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
Diwali 2025: கீர்த்தி சுரேஷ் முதல் ரம்யா பாண்டியன் வரை! - தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்
இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை தீபாவளி. குறிப்பாக திருமணமானவர்களுக்கு `தலை' தீபாவளி கொஞ்சம் கூடுதல் ஸ்பெசல்தான். அந்தவகையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.

ரம்யா பாண்டியன் - லோவல் தவான்
இயக்குநர் ராஜுமுருகனின் 'ஜோக்கர்', மலையாள நடிகர் மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திரைப்படங்கள் மட்டுமல்லாது, 'குக் வித் கோமாளி', 'பிக்பாஸ்' நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கும், அவரின் காதலர் லோவல் தவானுக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நவம்பரில் ரிஷிகேஷியில் திருமணமும், நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது தலை தீபாவளியை இப்போது கொண்டாட இருக்கின்றனர்.
நடிகர் நாகசைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா
பிரபல நடிகரும், நாகார்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து 2017ல் திருமணம் செய்தார். பிறகு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதனையடுத்து தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் நாகசைதன்யாவும் காதலித்து வந்தனர்.
இருவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி குடும்பத்தார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற்றது. இவர்களும் தங்களது தலை தீபாவளியை கொண்டாட இருக்கின்றனர்.

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி களிங்கராயர்
நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன்குழம்பும் மண் பானையும்’, ‘பூமரம்’, ‘ஒருபக்க கதை’, ‘விக்ரம்’, ‘ராயன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக தமிழில் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் காளிதாஸ் மாடலான தாரிணி களிங்கராயர் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்கள் தலை தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்
மகாநதி படத்துக்காக தேசிய விருதை வென்றவரும் தமிழ், தெலுங்கு தாண்டி பாலிவுட்டிலும் கால்பதித்த கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிகால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அந்தக் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். பின்னர் டிசம்பர் 15 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் தலை பொங்கலை கொண்டாடிய இவர்கள் தலை தீபாவளியையும் கொண்டாட இருக்கின்றனர்.

அபிநயா- வகிசனா கார்த்திக்
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஹிட் அடித்த 'நாடோடிகள்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. மாடலாக இருந்த அவர், தெலுங்கு திரையுலகில் 2008 ஆம் ஆண்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். தமிழில் நல்ல வரவேற்புக் கிடைக்க 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஈசன்', '7ஆம் அறிவு', 'வீரம்', 'பூஜை', 'மார்க் ஆண்டனி' எனப் பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேட்கும், பேசும் திறன் சவால் கொண்டவராக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நீண்ட நாள் காதலரான தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் அபிநயா. இவர்கள் இருவரும் தங்களது தலை தீபாவளியைக் கொண்டாட இருக்கின்றனர்.

சாக்ஸி அகர்வால் - நவ்னீத் மிஸ்ரா
தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். சின்ன திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கோவாவில் ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். தலை பொங்கலைச் சிறப்பாக கொண்டாடிய சாக்ஸி அகர்வால் - நவ்னீத் மிஸ்ரா தலை தீபாவளியையும் கொண்டாட இருக்கின்றனர்.
நீரஜ் சோப்ரா- ஹிமானி மோர் திருமணம்
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜ் சோப்ரா இந்த வருடத்தின் தொடக்கத்தில் டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோர் என்பவரைகடந்த ஜனவரி 16 ஆம் தேதி கரம்பிடித்தார். நெருங்கிய உறவினர்கள் முன் ஹிமாச்சல் பிரதேசத்தில் இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் தங்களது தலை தீபாவளியைக் கொண்டாட இருக்கின்றனர்.