செய்திகள் :

Diwali Release Movies Review: `பைசன்', ̀டியூட்', ̀டீசல்' - தீபாவளி ரிலீஸ் படங்களின் விகடன் விமர்சனம்

post image

பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான்! அப்படி இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக மாரி செல்வராஜின் 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்', ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' என மூன்று தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன.

தீபாவளி ரிலீஸ்
தீபாவளி ரிலீஸ்

இந்த மூன்று திரைப்படங்களின் விகடன் விமர்சனத்தையும் இங்கு மொத்தமாகப் பார்ப்போமா...

பைசன்:

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'பைசன்' திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வனத்தி கிராமத்திலிருக்கும் கிட்டானுக்கு கபடி மீது அளப்பரிய பிரியம். ஆனால், ஊரில் நடக்கும் யுத்தங்கள், தன்னுடைய அனுபவம் என கிட்டானின் கபடி ஆசைக்கு அவரின் தந்தை தடையாக இருக்கிறார்.

பைசன் படத்தில்...
பைசன் படத்தில்...

பிறகு, தனக்குப் போடப்பட்ட தடைகளை உடைத்து எப்படி கிட்டான் முன்னேறினார் என்பதுதான் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் கதை.

'பைசன்' படத்தின் முழுமையான விமர்சனத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

டியூட்:

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' ஆணவக் கொலை, ஆணாதிக்க சிந்தனை என்பது போன்ற சோசியல் மெசேஜ் சொல்லும் திரைப்படமாக திரைக்கு வந்திருக்கிறது. சென்னையில், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வரும் அகனுக்கு அவருடைய மாமா மகள் குறள் ப்ரொபோஸ் செய்கிறார்.

Dude Review | டியூட் விமர்சனம்
Dude Review | டியூட் விமர்சனம்

தொடக்கத்தில் குறளின் காதலை மறுக்கும் அகன், பின்பு, குறள் மீதான காதலைப் புரிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். பிறகு, அகன் மற்றும் குறள் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களே படத்தின் கதை.

'டியூட்' விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

டீசல்:

அறிமுக இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரைக்கு வந்திருக்கிறது 'டீசல்' திரைப்படம். டீசல் மாஃபியா செய்யும் மனோகர், பெற்றோரை இழந்த வாசுவை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார். தந்தையைத் தொடர்ந்து வாசுவும் டீசல் மாஃபியா களத்தில் குதிக்கிறார்.

டீசல் விமர்சனம் | Diesel Review
டீசல் விமர்சனம் | Diesel Review

இவர்களுக்கு எதிரில் இதே தொழிலில் பாலமுருகன் களமிறங்குகிறார். இதற்குப் பிறகு இவர்களுக்கு இடையில் நிகழும் மோதலே இந்த 'டீசல்' படத்தின் கதை.

'டீசல்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

`பொல்லாதவன்' முதல் `பைசன்' வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்!

தீபாவளி என்றில்லை எந்தவொரு கொண்டட்டத்தையும் சினிமா இல்லாமல் கடக்க முடியாது. குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதிலிருந்து திரையரங்கில் ஆட்டம்போதுவது வரை ஏதோ ஒரு வகையில் திரைப்படங்க... மேலும் பார்க்க

Diwali ''நான் 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்' பொண்ணு'' - நடிகை ஜெயா சீல் பேட்டி

'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' - 2000-ல் லவ் பண்ணவங்கள்ல ஆரம்பிச்சி, 2000-ல பிறந்து இப்போ லவ் பண்றவங்க வரைக்கும், இந்தப் பாட்டு இன்னமும் எவெக்ரீன் 'லவ் சாங்'காகத்தான் இருக்கு. இந்தப் பாட்ட... மேலும் பார்க்க

Diwali: ``அதைப் பார்க்க ஸ்வர்ணலதா இல்லைன்னு வருத்தப்பட்டேன்!" - புஷ்பவனம் குப்புசாமி பேட்டி

`கிராமத்துக் கதை, அதிலொரு நாட்டுப்புறப் பாடல் இருக்க வேண்டும்' என ஒரு படத்தின் இயக்குநர் சூழலைச் சொல்லி முடித்த அடுத்த நொடியே இசையமைப்பாளர்களுக்கு நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் முகமும்... மேலும் பார்க்க

Bison: `` ̀பைசன்'ல நடிக்கிறதுக்கு கபடியும், மாரி சாரும்தான் காரணம்!" - கபடி வீரர் பிரபஞ்சன் பேட்டி

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து 'பைசன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினத்தின் பிரதிபலிப்பாக வ... மேலும் பார்க்க

Bison:``விக்ரம் பட்ட அவமானங்கள் எனக்குத் தெரியும்; ஏளனமாக பார்த்தவர்கள் முன்னால்.." - அமீர் ஷேரிங்ஸ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது, 'பைசன்'. படத்தில் இயக்குநர் அமீரும் பாண்டியராஜாவாக முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'பைசன்' படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ், ... மேலும் பார்க்க

Bison: ``தோல்வியடைந்துவிட்டால் ஊருக்கு வரமாட்டேன் எனச் சொன்னேன்!" - வைரலாகும் ராஜரத்தினத்தின் பேட்டி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் ̀பைசன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை திரைப்படமாக கொண்டு வந்திருக்கிறார் மாரி ச... மேலும் பார்க்க