செய்திகள் :

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா?

post image

Doctor Vikatan: சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோ விட்டது சர்ச்சைக்குள்ளானது.  குழந்தை பிறந்ததும் வெட்டி எரிகிற தொப்புள்கொடியை இப்படி அணுகியது சரியானதா... அதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த  நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி

குழந்தை பிறக்கும்போது முக்கியமான சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். சுகப்பிரசவமோ, சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்பட்ட   குழந்தையோ... உடனடியாக குழந்தையின் தொப்புள்கொடியை தற்காலத்தில் வெட்டுவது கிடையாது.

தொப்புள்கொடியை வெட்டாமலேயே அந்தக் குழந்தையை, தாயின் வயிற்றின் மேலோ, மார்பகங்களுக்கு இடையிலோ வைத்திருக்கச் செய்யும் 'கங்காரு மதர் கேர்' சிகிச்சை இப்போதெல்லாம் பின்பற்றப்படுகிறது. குழந்தையின் அழுகை, இதயத்துடிப்பு, ஸ்பரிசம் எல்லாம் நார்மலாக இருக்கும்பட்சத்தில், கடைசியாகத்தான் தாயிடமிருந்து குழந்தையின் தொப்புள்கொடியைப் பிரிப்போம்.

தாயிடமிருந்து குழந்தைக்கு ரத்த ஓட்டம் வந்துகொண்டிருக்கும்.  அப்போது குழந்தையின் இதயத்துக்குப் பெரிதாக வேலை இருக்காது. அம்மாவின் ரத்தம் மூலம்தான் குழந்தையின் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்.

கங்காரு மதர் கேர்

தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன், குழந்தையின் இதயத்துடிப்பில் வித்தியாசமான சத்தம் ஏதும் கேட்கிறதா (அதை ஆங்கிலத்தில் murmur என்று சொல்வோம்), அதாவது இதயத்துடிப்புக்கு இடையில் வரக்கூடிய சின்னச்சின்ன சத்தங்கள் கேட்டால், குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னை ஏதும் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்வோம். அதன் பிறகு குழந்தைக்கு வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்றும் பார்ப்போம்.

முக்கியமாக அம்மாவின் ரத்தப்பிரிவு நெகட்டிவ்வாகவும், குழந்தைக்கு பாசிட்டிவ்வாகவும் இருக்கிறதா ( Rh incompatibility ) என்றும் பார்ப்போம்.  இதுபோன்ற நிலைகளில் தொப்புள்கொடியை வெட்டுவதை (Cord clamping ) தாமதப்படுத்துவோம்.

தொப்புள் கொடியை வெட்டும்போது, அதை வெட்டும் நபர் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு கிளவுஸ்கூட அணிந்திருக்க வேண்டியிருக்கும். பிறந்த குழந்தைகள் எப்போது நோய்வாய்ப்படுவார்கள் என்று சொல்ல முடியாது.  பிறக்கும்போதே மஞ்சள்காமாலை வந்து குழந்தை பாதிக்கப்படலாம்.  அதுபோன்ற தருணங்களில், தொப்புள்கொடி மூலமாகத்தான் டிரான்ஸ்ஃபியூஷன் எனப்படும் ரத்த மாற்றம் செய்வது, மஞ்சள் காமாலை பாதிக்ப்படும்பட்சத்தில் ரத்தத்தை மாற்றிவிட்டு வேறு ரத்தம் ஏற்றுவது போன்றவற்றைச் செய்வோம்.

பிரசவம்

இப்படிச் செய்யாவிட்டால் மூளை பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துபோகலாம் அல்லது வலிப்பு நோய் ஏற்பட்டு மூளை பாதிப்போடு குழந்தை வளரும். இதற்கெல்லாம் தொப்புள் கொடி அவசியம். அதிலுள்ள  குழாய்கள் வழியே இந்த வேலைகள் நடக்கும். 

முதலில் தொப்புள்கொடியை கிளாம்ப் என்று சொல்லக்கூடிய க்ளிப் போடுவது போன்று செய்வோம். இரண்டு கிளாம்ப் போட்டு, நடுவில்தான் வெட்டுவோம்.  இந்த கிளாம்ப் செய்யும்போது அதிகபட்ச சுத்தம், சுகாதாரத்துடன் செய்யவில்லை என்றால், லேசான இன்ஃபெக்ஷன்கூட  பிற்காலத்தில் குழந்தையை பாதிக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் பல குழந்தைகளுக்கு நரம்பு கிடைக்காமல், தொப்புள்கொடி வழியேதான் ஆன்டிபயாடிக் மருந்துகளையே செலுத்துவோம். பச்சிளம்குழந்தைகள் மருத்துவரால்தான் இதைக் கையாள முடியும். மகப்பேறு மருத்துவரோ, செவிலியரோகூட இதைச் செய்வது கிடையாது. இத்தனை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கையில், எதைப் பற்றியும் கவலையின்றி, குழந்தையின் தொப்புள்கொடியை அப்பாவோ, வேறு யாரோ வெட்டுவது என்பதெல்லாம் மிகத் தவறான, ஆபத்தான விஷயமே.  சட்டப்படியும் இது தவறு.  தொப்புள்கொடி மூலம் வரக்கூடிய இன்ஃபெக்ஷன் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பேசத் தெரியாத, உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத, சரியாகப் பார்க்கத் தெரியாத பச்சிளம் குழந்தையின் உயிரோடு விளையாடுகிற இதுபோன்ற செயல்கள் மிகப் பெரிய குற்றங்களே...

இன்ஃப்ளுயென்சராக இருக்கும் இவரின் இத்தகைய செயல்களைப் பார்த்து மற்றவர்களும் இப்படிச் செய்ய ஆரம்பித்தால் என்னவாகும்?  மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``கூவத்தூரில் நடந்த கூத்து மக்களுக்குத் தெரியும்!'' - எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

எவ்வளவோ சீனியர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு உதயநிதி பதிலடி கொடுத... மேலும் பார்க்க

விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளி முகேஷ். இவர் அப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சமூக ஆர்வலராகவு... மேலும் பார்க்க

``எல்.முருகனின் விஷமத்தை விட... சீமானின் கருத்து ஆபத்தானது'' - விசிக பொதுச் செயலாளர் அறிக்கை!

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை.."விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல... மேலும் பார்க்க

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்கா தேர்தல் களம்அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்... மேலும் பார்க்க

``ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்'' - ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பிரேமலதா வந்திருந்தார். அடுத்து ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க