செய்திகள் :

Fahad Fazil: `4 வருடத்தில் 4 திரைப்படங்கள்' - ஃபகத் - மகேஷ் நாரயணனின் அதிரடி காம்போ

post image
மாலிவுட்டில் தற்போது ஒரு பிரமாண்ட புராஜெக்ட் உருவாகி வருகிறது.

மகேஷ் நாரயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன் லால், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் எனப் பல உச்ச நட்சத்திரங்களும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இத்திரைப்படடத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் இலங்கையில் தொடங்கியது. படத்தின் பூஜை ஸ்டில்ஸும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இதில் மற்றொரு ஸ்பெஷலான விஷயமும் இருக்கிறது. நான்கு வருடத்தில் நான்கு முறை மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் நடித்துவிட்டார். அதுவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது இந்தக் கூட்டணி.

2017-ம் ஆண்டு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் வெளியான `டேக் ஆஃப்' திரைப்படத்தில் பார்வதி, குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து ஃபகத் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் முதன்மை கதாபாத்திரத்தில் `C U Soon' திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் முழுவதையும் ஐபோனில் படம்பிடித்து வெளியிட்டது படக்குழு.

C U Soon

கொரோனா காலத்தில் இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. `ஸ்க்ரீன் லைஃப் ஃபிலிம்' எனக் குறிப்பிடப்படும் ஒரு ஜானரை மையப்படுத்தியது இத்திரைப்படம். அதாவாது முழுக்க முழுக்க ஒரு போன் அல்லது கணினி திரையிலேயே நகரும் முழு நீள திரைப்படத்தை இப்படிக் குறிப்பிடுவார்கள். மாலிவுட்டின் இந்த புதிய முயற்சி பார்வையாளர்களுக்கும் பிடித்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றப் பிறகு இந்த கூட்டணிக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரியும் உருவானது.

இதன் பிறகு 2021-ம் ஆண்டு இதே கூட்டணியிடமிருந்து `மாலிக்' திரைப்படம் வெளியானது. பொலிட்டிகல் த்ரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தின் ரிலீஸ் கொரோனாவால் தாமதமாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு மகேஷ் நாரயணனின் திரைக்கதையில் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் `மலையன் குஞ்சு' திரைப்படம் வெளியானது. நிலச்சரிவு சம்பவத்தை மையப்படுத்திய இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது.1992-ம் ஆண்டிற்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மலையாள திரைப்படம் இதுதான்.

Mahesh Narayanan

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் சிறுகதைகளை மையப்படுத்திய `மனோரதங்கள்' ஆந்தாலஜி இந்தாண்டு `ஜீ 5' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருந்தது. மம்முட்டி, மோகன்லால், ஃபகத் எனப் பலரும் இந்த ஆந்தாலஜியின் வெவ்வேறு எபிசோடுகளில் நடித்திருந்தனர். இந்த ஆந்தாலஜியிலும் மகேஷ் நாரயணன் - ஃபகத் கூட்டணியில் உருவான ஒரு பாகம் இடம்பெற்றது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான `ஷெர்லாக்' என்ற எபிசோடில் ஃபகத் நடித்திருந்தார்.

நம்பிக்கைக்குரிய இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு பெரிய புராஜெக்ட்டிற்காக தற்போது இணைந்திருக்கிறது. பரஸ்பர நம்பிக்கையுடன் இந்தக் கூட்டணி குறுகிய கால இடைவெளியில் நான்கு அடிப்பொலி சினிமாவைக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல தற்போது ஐந்தாவது சினிமாவும் தயாராகி வருகிறது.

புத்தம் புதிய விகடன் ப்ளே (Vikatan Play) :

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Parachute Series: "Kanguva படத்தை மிஸ் பண்ணிட்டேன்; CWC ஒரு விபத்து மாதிரி" - கனி ஓப்பன் டாக்

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Yogi Babu: `ஹாலிவுட் படத்தில் யோகி பாபு' என்ன படம்? யார் டைரக்டர் தெரியுமா?

'Trap City' படம் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் நடிகர் யோகி பாபு.திருச்சியை சேர்ந்த இயக்குநர் டெல்.கே.கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘Trap City’. இந்த படத்தில் பிராண்டன் டி. ஜ... மேலும் பார்க்க

Sivakarthikeyan: 'ஒரு வேளை எலான் மஸ்க் இதைச் செய்தால்...!' - IFFI திரைப்பட விழாவில் எஸ்.கே கலகல

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் எலான் மஸ்க், ட்விட்டர் (எக்ஸ்)குறித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன் ட்விட்டர் உ... மேலும் பார்க்க

Movie Review: "விமர்சனம் இல்லை என்றால் நல்ல படங்கள் காணாமல் போய்விடும்" -சுரேஷ் காமாட்சி பளிச் பதில்

'கங்குவா' திரைப்படத்திற்குக் கடுமையான விமர்சனங்கள் வந்தது கோலிவுட்டில் பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது.குறிப்பாக, கடுமையான விமர்சனங்களால் 'கங்குவா' திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று "இனி முதல் ஒ... மேலும் பார்க்க

"தியேட்டர் வாசலில் மக்களிடம் ரிவ்யூ கேட்பதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியுங்கள்"- சீனு ராமசாமி

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான 'கங்குவா' திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை சந்தித்தது.இது சம்மந்தமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தல... மேலும் பார்க்க

``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மோகினி டே

'ஆழமாக நேசித்தப்போதிலும் கணவரை பிரிகிறேன்' என்று கடந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி அவர்களது விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஏ.ஆர் ரஹ்மானின் பேசிஸ்ட் மோகினி டே ... மேலும் பார்க்க