Ind vs Nz: 59 ரன்கள்; 7 விக்கெட்டுகள்! - அசத்திய வாஷிங்டன் சுந்தர்
புனேவில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்டில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றிருந்தது. இந்தியாவில் வைத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட்டை வெற்றி பெற்று சாதனைப் படைத்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கிறது.
இந்த முதல் இன்னிங்ஸில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறார். பலரும் வாஷிங்டன் சுந்தருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் தமிழக கிரிக்கெட் வீரர்களே வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. இது நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 243 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...