Modi-க்கு எதிர்க்கட்சி; Edappadi Palanisamy-க்கு சொந்த கட்சி... சோதனை மேல் சோதனை...
International Day for Violence against Women: `இனி மன்னிப்பதற்கில்லை' - ஐ.நா. சொல்வதென்ன?
இன்று (International Day for the Elimination of Violence against Women). ஐ.நா. இந்த தினத்துக்கான இந்த வருடமாக தீம் ஆக 'ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள்' என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளது (Every 10 minutes, a woman is killed).
உலக அளவில் 736 மில்லியன் பெண்கள் உடல் ரீதியான பாலியல் வன்முறையைச் சந்தித்திருக்கிறார்கள். 16-58 சதவிகித பெண்கள் சமூக வலைதளங்களில் அநாகரிகமான கமென்ட்ஸ் முதல் போட்டோ மார்பிங் வரை பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தவிர, உள்ளூர் போராட்டம் முதல் நாடுகளுக்கிடையேயான போர் வரை பெண்களும் குழந்தைகளும் சந்திக்கின்ற கொடுமைகள் 70 சதவிகிதம் என்கிறது ஐ.நா. 2018-2022 வரை எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 35 சதவிகித பெண்கள் தன்னுடைய துணையாலோ அல்லது வேறொரு ஆணாலோ பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 137 பெண்கள் அவர்களுடைய குடும்பத்தினராலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனையொட்டியே, இந்த வருடம் இனி மன்னிப்பதற்கில்லை என்ற அர்த்தம் தொனிக்கும் '#NoExcuse' என்கிற ஹேஷ்டேகை ஐ.நா. வெளியிட்டுள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. இதுதொடர்பாக, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி அவர்களிடம் பேசினோம்.
''பெண்கள் மீதான வவ்முறை என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது பாலியல் வன்முறை மட்டுமே. ஆனால், இன்னும் பல வன்முறைகள் தினம் தினம் பெண்கள் மீது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. குடும்ப வன்முறை, சாதியம் சார்ந்த வன்முறை, மதம் காரணமான அல்லது மதவெறி அரசியல் காரணமான வன்முறை, போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் இயங்குகிற பெண்கள் மீது காவல்துறை செய்கிற மற்றும் லாக்கப்பில் நடக்கிற அரச வன்முறை, வறுமை என்கிற பொருளாதார வன்முறை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
உலகமே உயிருக்கு பயந்து லாக்டவுனில் இருந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டன என புள்ளி விவரங்கள் தெரிவித்தன. 'நிழல் பெருந்தொற்று' (Shadow Pandemic) என ஐ.நா.வும் அதை குறிப்பிட்டது.
பெண்ணை சக மனுஷியாக பார்க்க வேண்டும் என்கிற கருத்தியல், அதுசார்ந்த விரல் விட்டு எண்ணக்கூடிய அமைப்புகளால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன. அதற்குபதில், குடும்பங்களில், மத நிறுவனங்களில், ஊடகங்களில் இந்தக் கருத்தியல் அரசின் நடவடிக்கைகள் மூலம் செயல்பாட்டுக்கு வர வேண்டும். அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள் எல்லாமே, பெண்ணை சக மனுஷியாக நடத்துகிற வண்ணம் மாற வேண்டும்.
ஒரு புள்ளியில் இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க முடியாது. ஒரு குற்றம் நடந்தவுடனே அரசு அதில் தலையீடு செய்வது, சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் செய்வது என எல்லாமும் கைகோக்க வேண்டிய நிலை அது. பாதிக்கப்பட்ட பெண்கள் இதை அவர்கள் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட, கெளரவம் சம்பந்தப்பட்ட, மானம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இல்லமல், வன்முறையாக மட்டுமே பார்க்க வேண்டும்.
நாம் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம். கூடுதலாக, பெண்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்த வேண்டுமென்கிற சித்தாந்தத்தை எதிர்த்து போராட வேண்டும்.
'நீ ஏன் பத்து மணிக்கு வெளியே போனே; நீ ஏன் அப்படி டிரெஸ் பண்ணே; நீ தலித்; நீ ஏன் பாய் ஃபிரெண்ட்கூட சினிமாவுக்குப் போனே' என்று இன்னமும் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கியே விரல் நீட்டிக்கொண்டிருக்கிறோம்.
பில்கிஸ் பானு விஷயத்தில் குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி தண்டனை காலத்துக்கு முன்பே அவர்களை விடுவித்தது; அவர்களை வரவேற்றுக் கொண்டாடியது எல்லாம், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பதற்கான அச்சுறுத்தலே. அப்படியே புகார் கொடுத்தாலும், பணம் வாங்கிக்கொண்டு செட்டில் செய்வது, 'உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகாது' என்று பயமுறுத்தி புகார் கொடுப்பதைத் தடுப்பது என காவல்துறையிலும் சிலர் இருக்கிறார்கள். இந்த அணுகுமுறை மாற வேண்டும்.
இவ்வளவு காலமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் எக்ஸ்க்யூஸ் கொடுத்துக்கொண்டிருந்தோம். இனி அது முடியாது என்கிறது ஐ.நா.வும். அந்த ஹேஷ்டேக் தற்போதைய சூழலுக்கு மிகப்பொருத்தமான ஒன்றே'' என்கிறார் உ. வாசுகி.
தமிழகத்தின் சாதனைப் பெண்களைக் கொண்டாடும், 2024-க்கான `அவள் விருதுகள்' விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகடனின் புதிய முயற்சியான `Vikatan Play' (விகடன் ப்ளே) சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பாரதி பாஸ்கர் இன்றைய நிகழ்ச்சியில் `விகடன் ப்ளே'-க்கான லோகோவை வெளியிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடிய விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், `விகடன் ப்ளே'-வின் முதல் எக்ஸ்க்ளூசிவ் ஒரிஜினல் ஆடியோவாக `நீரதிகாரம்' தொடரை வெளியிட்டார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கோடு சேர்த்து அணைக் கட்டுமானத்தில் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் மக்களின் உழைப்பையும் வரலாற்றையும் விரிவாகப் பதிவு செய்தது, ஆனந்த விகடனில் 122 வாரங்கள் தொடராக வந்த `நீரதிகாரம்' நாவல். நாவலாகவும், புத்தகமாகவும் விகடன் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற `நீரதிகாரம்' இன்று முதல் ஆடியோ வடிவிலும் வெளியாகியிருக்கிறது.