IPL Mega Auction : '10 கோடிக்கு சென்னை கேட்டு வாங்கிய ஸ்பின்னர்!' - யார் இந்த நூ...
IPL Mega Auction : 'மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் அஷ்வின்!' - ராஜஸ்தானோடு போட்டி போட்டு வென்ற CSK!
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் பேட்டர்களுக்கான செட் ஒன்று ஏலம் விடப்பட்டது. இதில் சென்னை அணி தங்களின் டெவான் கான்வேயை 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது. அதுபோக, 9.75 கோடி ரூபாய் கொடுத்து அஷ்வின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறது.
சென்னை அணி முதல் இரண்டு Marquee Set களிலுமே நிறைய வீரர்களுக்கு முயன்றிருந்தது. கே.எல்.ராகுல், சிராஜ், ஷமி என சென்னை முயன்ற எந்த வீரர்களையும் அவர்களால் வாங்க முடியவில்லை. இந்நிலையில்தான், மூன்றாவதாக பேட்டர்களுக்கான செட் ஓப்பன் செய்யப்பட்டது. இதில், டெவான் கான்வே பெயரும் வந்தது. அவரின் பெயர் உச்சரிக்கப்பட்ட உடனேயே சென்னை அணி கையை தூக்கி விட்டது. சென்னை அணிக்கு போட்டியாக பஞ்சாப் அணி களமிறங்கியது. இரண்டு அணிகளும் மாறி மாறி கையை தூக்க கான்வேயின் விலை உயர்ந்தது. ஆனால், 6 கோடிக்கு மேல் சென்றவுடன் பஞ்சாப் பின் வாங்கிக் கொண்டது. இறுதியாக சென்னை 6.25 கோடிக்கு கான்வேயை வாங்கிக் கொண்டது.
ஓப்பனிங் கூட்டணிதான் எப்போதுமே சென்னையின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும். அதிலும் ஒரு இந்திய பேட்டர் ஒரு வெளிநாட்டு பேட்டர் என்பதாகத்தான் சென்னை அணி ஓப்பனிங் கூட்டணியை வடிவமைக்கும். ஹேடன், ஸ்மித், மெக்கல்லம், ஹஸ்ஸி, டூப்ளெஸ்சிஸ் என இந்த வெளிநாட்டு பேட்டர்கள் எல்லாருமே சென்னை அணியின் ஒப்பனர்களாக அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருப்பர். அந்த வரிசையில் கான்வேயும் சென்னை அணியின் மிக முக்கிய ஓப்பனிங் வீரர். 2023 சீசனுக்கு முன்பாக அவரை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்கள்.
டூ ப்ளெஸ்சிஸின் இடத்தை கான்வேயை வைத்து நிரப்பினார். 2023 சீசனில் ருத்துராஜோடு கான்வே ஓப்பனராக களமிறங்கினார். அந்த சீசனில் 672 ரன்களை கான்வே எடுத்திருந்தார். கடந்த சீசனில் காயம் காரணமாக பாதி சீசனுக்குதான் ஆடியிருந்தார். ஆனாலும் நன்றாக ஆடியிருந்தார். ருத்துராஜூடன் எல்லாவிதத்திலும் ஒத்துப்போகக்கூடிய ஆட்ட முறையை கொண்டிருப்பவர் என்பதால் சென்னை அணி இவரை கட்டாயம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரியே பஞ்சாபுடன் போட்டியிட்டு கான்வேயை மீண்டும் மஞ்சள் ஜெர்சிக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
இதே பேட்டர்களின் செட்டில் ராகுல் திரிபாதியையும் சென்னை அணி 3.40 கோடிக்கு வாங்கியிருந்தது.
அடுத்ததாக ஆல்ரவுண்டர் செட்டில் ரச்சின் ரவீந்திராவின் பெயர் வந்தது. இவருக்கும் ஆரம்பத்திலேயே சென்னை அணி கையை தூக்கியது. ஆனால், பஞ்சாப் அணியும் சென்னையுடன் போட்டி போட்டது. 3.40 கோடியில் சென்னை பின் வாங்கியது. பஞ்சாப் ரச்சினை வாங்கியது. ஆனால், சென்னை அணி RTM கேட்கவே பஞ்சாப் அணி சொன்ன 4 கோடிக்கு சென்னை அணி ரச்சினை வாங்கிக் கொண்டது.
அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின் பெயர் வந்தது. சென்னை அணி அஷ்வினை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேமாதிரியே சென்னை அஷ்வினுக்காக கடுமையாக முயன்றது. தொடக்கத்தில் லக்னோ, பெங்களூர் ஆகிய அணிகள் சென்னைக்கு போட்டியாக வந்தன. ஒரு கட்டத்தில் அந்த அணிகள் விலகிக்கொள்ள ராஜஸ்தான் அணி கோதாவில் இறங்கியது.
சென்னை தொடர்ந்து அஷ்வினை வாங்க போராடியது. கடந்த சில சீசன்களாக அஷ்வின் ராஜஸ்தானுக்காக ஆடி வந்தார். ஆனால், அஷ்வினின் கரியரே சென்னை அணியிலிருந்துதான் தொடங்கியது. அதனால் இரு அணிகளுமே அஷ்வினுக்கு கடுமையாக போட்டி போட்டன. ஆனால், கடைசியில் சென்னையே வென்றது. 9.75 கோடிக்கு அஷ்வினை சென்னை வாங்கியது. இதன்மூலம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்வின் சென்னை அணிக்கு திரும்புகிறார்.