செய்திகள் :

ITC ஹோட்டல் விருந்து... களமிறக்கப்படும் பிரஜேந்திர நவ்நீத்... நிதிக்குழுவிடம் சாதிப்பாரா முதல்வர்?

post image
வரும் நவம்பர் 17-ம் தேதியிலிருந்து, அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறது 16-வது நிதிக்குழு.

அதற்காக, டெல்லியிலிருந்து தனி விமானத்தில் குழுவின் தலைவரான அரவிந்த் பனகாரியாவும் குழுவின் உறுப்பினர்களும் சென்னை வரவிருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வரிவருவாய் பகிர்வு, மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, பேரிடர் மேலாண்மை காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நிதிக்குழுவின் பரிந்துரைகள்தான் அமல்படுத்தப்படுகிறது என்பதால், 16-வது நிதிக்குழுவின் தமிழக பயணம் அரசியல் வட்டாரத்திலும் கோட்டையிலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டசபை

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், "கடந்த 2017-ல் அமைக்கப்பட்ட 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளினால் தமிழகத்திற்குப் பெரிய நன்மை ஏதும் கிடைத்துவிடவில்லை. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நிதிக்குழுவின் பரிந்துரைகள் அளிக்கப்பட்டதால், பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலமாக மக்கள் தொகையை பெருமளவு கட்டுப்படுத்திய தென்மாநிலங்களில் பெரியளவில் பாதிக்கப்பட்டன. தவிர, வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வரி வருவாயை எடுத்து, வளர்ச்சி பெறாத மாநிலங்கள், மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறது நிதிக்குழு. இதனாலும் தென்மாநிலங்கள் பாதிப்படைகின்றன.

சமீபத்தில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். அப்போது, 'ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநிலங்களின் நிதிப்பங்களிப்பு அதிகரித்துள்ளது. அதனால் மாநிலங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் செயல்திறன் நன்றாக இருக்கும்போதிலும், நிதிக்குழுக்களில் தொடர்ந்து தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டு வருவதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தொகையில் 3.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' எனப் பேசினார் அமைச்சர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

'மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை', 'பெண்களுக்கு இலவச பஸ் பயணம்', 'மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை' எனப் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம், வரி வருவாயில் உரிய நிதிப்பகிர்வு கிடைத்தால்தான், நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்திட முடியும். இந்தச் சூழலில்தான், தமிழகத்திற்கு வருகிறது 16-வது நிதிக்குழு.

அக்குழுவினருக்கு சென்னையிலுள்ள ஐ.டி.சி ஹோட்டலில் இரவு விருந்து அளிக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நவம்பர் 18-ம் தேதி, நிதிக்குழுவினருடன் கோட்டையில் ஆலோசனையும் நடத்தவிருக்கிறார். அடுத்ததாக, ஶ்ரீபெரும்புதூரிலும் இராமநாதபுரத்திலும் கள ஆய்வு செய்கிறது நிதிக்குழு. இராமேஸ்வரம் கோவிலில் அவர்கள் வழிபாடு செய்யவும் கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளையெல்லாம் ஒருங்கிணைப்பது நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் தான் என்றாலும், வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத்க்கு கூடுதல் பொறுப்பை ஒதுக்கியிருக்கிறார் முதல்வர்.

பிரஜேந்திர நவ்நீத்

நிதிக்குழுவிற்கான தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஜேந்திர நவ்நீத் ஐ.ஏ.எஸ்., பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இயக்குநராகவும் இணைச் செயலாளராகவும் சுமார் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உடையவர். மோடிக்கும் நன்கு அறிமுகமானவர். பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளுடனும் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் நெருங்கிப் பழகியவர். உலக வர்த்தக மையத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு தமிழகம் திரும்பியவரை, வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக நியமித்த முதல்வர், நிதிக்குழுவை கையாளும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். பிரதமர் அலுவலகத்துடன் பிரஜேந்திர நவ்நீத்க்கு இருக்கும் நெருக்கத்தால், தமிழகத்தின் நிதித் தேவைகளை நிதிக்குழுவிடம் மட்டுமல்ல, டெல்லியிலும் அவரால் எடுத்துச் சொல்ல முடியும் என்பது முதல்வரின் கணக்கு.

முதல்வர் ஸ்டாலின்

முந்தைய நிதிக்குழு அளித்த பரிந்துரைகளெல்லாம் 2025-ம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிடுகின்றன. தற்போது அமைக்கப்பட்டுள்ள 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் 2026-லிருந்து அமலுக்கு வரவிருக்கின்றன. அந்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதால், கடைசியாக சமர்ப்பிக்கப்படும் தமிழக பட்ஜெட் கூடுதல் கவனம் பெறும். சிறப்பு சலுகைகள், கவனம் ஈர்க்கும் அறிவிப்புகளை எல்லோருமே எதிர்பார்ப்பார்கள். அதோடு, வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள், மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது தமிழக அரசு. அரசு ஊழியர்களுக்கும் ஏதாவது நிதிச் சலுகையை வழங்கவும் ஆலோசிக்கப்படுகிறது. அதற்கெல்லாம், வரிவருவாய் பகிர்வில் தமிழகத்திற்கு உரிய பங்களிப்புக் கிடைத்தால்தான், தேர்தலுக்குள் நினைத்ததையெல்லாம் செய்ய முடியும்." என்கிறார்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

ஒன் பை டூ

சைதை சாதிக்சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் ... மேலும் பார்க்க

EPS-ன் SPY டீம்...& வேட்பாளர்கள் தேர்வில் Udhayanidhi! | Elangovan Explains

பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற... மேலும் பார்க்க

`விஜய் போலதான் நானும்... 'உச்ச நடிகராக' இருக்கும்போது அரசியலுக்கு வந்தேன்' - சரத்குமார் பேச்சு!

சென்னையில் தொண்டர்களைச் சந்திக்கும் விழாவைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் சரத்குமார். அப்போது விஜய் அரசியல் குறித்தும், பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.வ... மேலும் பார்க்க

Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல்துறையினருக்கு உதவும் வகையில் தன்னார்வமுள்ள திருநங்கைகளை பணியமர்த்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.திருநங்கை தன்னார்வளர்களு... மேலும் பார்க்க