செய்திகள் :

Kanguva: `980 நாள்களுக்குப் பிறகு சூர்யாவின் படம்' - கங்குவா டைம்லைன் ஒரு பார்வை!

post image
பிரமாண்டமான முறையில் இன்று வெளியாகியிருக்கிறது `கங்குவா'.

பல சவால்களையும் தடைகளையும் தாண்டி இன்று திரைக்கு வந்திருக்கிறது `கங்குவா'. கிட்டத்தட்ட 38 மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது. ஃபிரஞ்சு, ஸ்பானிஷ் உட்பட 8 மொழிகளில் திரையரங்குகளில் மட்டும் வெளியாகிறது. இப்படியான பிரமாண்ட ரிலீஸுக்கு வந்திருக்கும் படத்தின் டைம்லைன் பார்வையை இங்கே பார்க்கலாம்.

ஏப்ரல் 2019: இயக்குநர் சிறுத்தை சிவா `விஸ்வாசம்' திரைப்படத்தை முடித்தப் பிறகு சூர்யாவுடன் இணையவிருக்கிறார் எனப் பேசப்பட்டது. அதன் பிறகு 2019 ஏப்ரல் மாதம் சிறுத்தை சிவா `சூர்யாவின் 39'-வது படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. அந்த சமயத்தில் ரஜினியின் படத்தை இயக்க சிறுத்தை சிவாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் சூர்யாவுடனான திரைப்படமும் தாமதமானது. கொரோனா ஊரடங்கு காலத்தில் படத்தின் முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டார் சிறுத்தை சிவா.

ஏப்ரல் 21 2022: அதன் பிறகு சூர்யாவின் 42-வது திரைப்படத்தை சிவா இயக்கவிருக்கிறார் என தகவல்கள் வந்தன. படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் 21 2022-ல் பூஜை போட்டபட்டது. அப்போதே படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவித்திருந்தனர்.

ஆகஸ்ட் 2022 : படத்தின் நிகழ்கால காட்சிகளில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தது. இத்திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் திஷா பதானி.

செப்டம்பர் 9 2022: ப்ரீயட் திரைப்படம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 9, 2022-ல் `சூர்யா 42' திரைப்படம் 10 மொழிகளிலும் வெளியாகும் என்பதை மோஷன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

Kanguva

ஏப்ரல் 16 2023: படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கையில் ஏப்ரல் 16 2023-ல் படத்தின் தலைப்பு `கங்குவா' என அறிவிக்கப்பட்டது.

ஜூலை 2023: படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. `அனிமல்' திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தில் அவர் கமிட்டானர். இத்திரைப்படம்தான் பாபி தியோலின் கோலிவுட் அறிமுகம்.

ஜூலை 22 2023 : சூர்யாவின் தோற்றத்தை அறிமுகப்படுத்தி ஜூலை 22 2023-ல் படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. வரலாற்று பின்னணியில் பிரமாண்டமாக உருவாகும் படத்தின் டீஸர் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்து திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

ஜூலை 23 2023: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை 23 2023-ல் வெளியிட்டிருந்தனர்.

அக்டோபர் 15 2023: படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

நவம்பர் 23 2023: சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ரோப்களில் கேமராவை கட்டி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ரோப்பிலிருந்து கேமரா தவறி சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்தது.

Kanguva Exclusive

ஜனவரி 2024: ஜனவரி 16 `கங்குவா' திரைப்படத்தில் சூர்யாவின் நிகழ்கால தோற்றத்தைக் கொண்ட போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதன் பிறகு ஜனவரி 27-ம் தேதி படத்தில் பாபி தியோலின் தோற்றத்தை வெளியிட்டது.

மார்ச் 23 2024: மும்பையில் அமேசான் ப்ரைம் வீடியோ நிகழ்வில் வைத்து படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டது படக்குழு.

ஜூன் 8 2024: திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

ஜூலை 23 2024: சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பஷலாக படத்தின் முதல் பாடலான `ஃபையர் சாங்' வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 24 2024: பீரியட் காட்சிகளைக் கொண்ட படத்தின் டிரைலர் வெளியிட்டனர்.

செப்டம்பர் 19 2024: படத்தின் ரிலீஸ் நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அக்டோபர் 20 2024: படத்தில் நிகழ்கால காட்சிகளில் வரும் `YOLO' பாடல் வெளியானது.

சூர்யா | Kanguva Exclusive

அக்டோபர் 30 2024: படத்தின் எடிட்டர் நிசாத் யூசுப் காலமானார்.

நவம்பர் 10 2024 : படத்தின் ரிலீஸ் டிரைலர் வெளியாகி `கங்குவா' மீதான எதிர்பார்ப்பை எகிரவைத்தது.

நவம்பர் 12 2024: 20 கோடி ரூபாயை வரும் 13ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என சிக்கல் எழுந்தது .

நவம்பர் 14 2024: பல சவால்களையும் தடைகளையும் தாண்டி இன்று பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 980 நாள்களுக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Inbox 2.0 Ep 9: Kanguva படம் பார்த்தவங்க இந்த வீடியோவையும் பாருங்க! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 9 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' - ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.அந்தப் பதிவில், ``நண்... மேலும் பார்க்க

கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப... மேலும் பார்க்க

Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? - உண்மையில் நடந்தது என்ன?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ... மேலும் பார்க்க