செய்திகள் :

Karan Johar: ``அப்படி விமர்சனம் சொல்வதுதான் எனக்கு பிரச்னை; அது தொந்தரவு செய்கிறது!'' - கரண் ஜோகர்

post image

கரண் ஜோகர் தயாரிப்பில் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் `நதானியான்'. பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் அலி கான் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த `நதானியான்'. இப்படத்தில் அவருடன் நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரும் நடித்திருக்கிறார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் இப்படத்திற்கு கிடைக்கும் காட்டமான விமர்சனங்கள் பற்றி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் கரண் ஜோகர்.

கரண் ஜோகர்

அவர் பேசுகையில், ``என்னைப் பற்றி தெரிந்த மக்களுக்கு எனக்கும் திரைப்பட விமர்சகர்களுக்கு இடையே இருக்கும் உறவு பற்றி தெரியும். அவர்கள் எழுதுவதை பொறுத்து இந்த உறவு மாற்றம் பெறாது. இது அவர்களுடைய வேலைதான். அவர்கள் ஒரு படத்தை கீழே இறக்க வேண்டும் என குறிக்கோளுடன் சுற்றுவதாக நான் கட்டுக்கதைகளை சொல்லவே மாட்டேன். ஒரு விமர்சகர் இப்படத்தை நான் உதைக்க வேண்டும் என எழுதியிருக்கிறார். இப்படியான வகைகளில் நீங்கள் எழுதும்போதுதான் எனக்கு பிரச்னை எழுகிறது. இது என்னை தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் அறிவார்ந்த திரைப்பட விமர்சகர்களுக்கு இரக்கமுள்ள ஒரு பக்கம் இருக்கும். யாரும் இங்கு உதைக்கப்பட வேண்டாம். உதைப்பது வன்முறையான விஷயம். நிதர்சன உலகத்தில் இந்த வார்த்தை வன்முறைக்கு நேரானது." எனப் பேசியிருக்கிறார்.

Dhoni: 'அனிமல்' ரன்பீர் கபூராக தோனி... வைரலாகும் சந்தீப் ரெட்டி வாங்காவுடனான தோனியின் விளம்பரம்!

ரிஷப் பண்ட்டின் சகோதரி நிச்சயதார்த்த விழா, ஐ.பி.எல் பயிற்சி, விளம்பரங்கள் என இப்போது எங்கும் தோனிதான் இருக்கிறார். தற்சமயம் ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்கிடை... மேலும் பார்க்க

இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய வருமான வரி?

மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஒரு நேரத்தில் கடுமையான கடன் தொல்லையால் சிரமப்பட்டார். ஆனால் அதன் பிறகு கடினமாக உழைத்து இன்றைக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்தும் நபராக உயர்ந்திருக்கிறார். கடந்த... மேலும் பார்க்க

Kangana Ranaut:``அவர்களின் வேடிக்கையான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்துக்கொள்ளட்டும்'' - கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'எமர்ஜென்சி'. முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி இ... மேலும் பார்க்க

Mannat : தாஜ்மஹால் போல... தன் ராணிக்காக மன்னர் கட்டிய `மன்னத்’ பங்களா - ஷாருக்கான் வாங்கியது எப்படி?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் கடற்கரையோரம் வசிக்கும் மன்னத் பங்களா மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். இக்கட்டிடத்தை பார்க்கவே தினமும் ஏராளமானோர் அங்கு வருகின்றனர். அவர்கள் மன்னத் கட்டிடத்திற்கு வ... மேலும் பார்க்க

Aamir khan : `அன்பான லைஃப் பார்ட்னரை தேடியபோது..!' - ஆமீர் கானிடம் காதலில் விழுந்தது குறித்து கெளரி

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து அவர்களை திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் ஆமீர் கான் தனித்து வாழ்ந்து வந்தார். தற்போது தனது 6... மேலும் பார்க்க

Aamir Khan: ``எனக்கும் சல்மான் கானுக்கும் அதே ஆசைதான்'' - சொல்கிறார் ஆமீர் கான்

தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்குத் தனது புதிய துணையை அறிமுகப்படுத்தியிருந்தார் பாலிவுட் நடிகர் ஆமீர் கான். இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தான அப்டேட்டையு... மேலும் பார்க்க