செய்திகள் :

``Kohli -Slowly'' விராட்டை கடுப்பேற்றும் பேட் கம்மின்ஸ் - வீடியோ வைரல்!

post image

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய வீரர் விராட்க் கோலியை ஆத்திரமூட்டும் வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விளம்பரம் ஒன்றி பேசியுள்ளார்.

இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியின் பேட்டிங்கைக் காண ஆர்வமாக இருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் விளம்பரத்தில், தாடியை ஷேவ் செய்யும் பேட் கம்மின்ஸ் களத்தில் ஒவ்வொரு நாட்டின் பேட்ஸ் மேனையும் எப்படி கிண்டல் செய்து ஆத்திரமூட்டுவது என பயிற்சி செய்துகொண்டிருப்பார்.

Virat Kohli -ஐ கிண்டல் செய்யும் கம்மின்ஸ்!

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதில் கோலி குறித்து, “Hey Kohli, I’ve never seen you bat this slowly. Slowly!” என கேலி செய்கிறார் கம்மின்ஸ்.

கடந்த சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை கேலி செய்யும் விதமாக கம்மின்ஸ், "கோலி, நீ இவ்வளவு மெதுவாக விளையாடி நான் பார்த்ததே இல்லை" எனக் கூறியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Kohli

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா கம்மின்ஸ்?

பேட் கம்மின்ஸ் சாம்பியப்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்டூ மெக்டொனால்ட், கம்மின்ஸ் அணியில் இணைய வாய்ப்பில் எனக் கூறியிருந்தார்.

சமீபத்தில் கம்மின்ஸுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால், தற்போது நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டயிலும் கம்மின்ஸ் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணுக்கால் காயத்தாலும் ஓய்வு பெற்று வருகிறார்.

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்

கம்மின்ஸ் இல்லாதநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு தலைமைதாங்க ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட்டின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மெக்டொனாலட் கூறியுள்ளார். கம்மின்ஸின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Rahul Dravid: சாலையில் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த டிராவிட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், சாலையில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிராவிட் ... மேலும் பார்க்க

Champions Trophy: "ரோஹித் பின்வாங்கமாட்டார்; விராட் செய்ய வேண்டியது..." - அஸ்வின் கணிப்பு என்ன?

ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்க நெருங்க கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் ஜாம்பவான்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த சில போட்டிகளில் இருவரும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்ல... மேலும் பார்க்க

Abisheik Sharma: யுவராஜின் பயிற்சி முகாம்; லாராவின் ஃபோன் கால்- அபிஷேக் சர்மா சாதித்தது எப்படி?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா கலக்கியிருக்கிறார். 5 போட்டிகளிலும் சேர்த்து 279 ரன்களை எடுத்திருக்கிறார். 5 வது டி20 போட்டியில் அவர் ஆடியதெல்லாம் ருத்ரதாண்டவம். 54 பந்துகளில் 135 ரன... மேலும் பார்க்க

Himanshu Sangwan: `கோலி விக்கெட் எடுக்க ஐடியா கொடுத்த பஸ் டிரைவர்' - சுவாரஸ்யம் பகிர்ந்த ஹிமான்ஷு

ரஞ்சி டிராபியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய இந்திய வீரர் விராட் கோலியை, வெறும் 6 ரன்களில் ஆஃப் ஸ்டம்ப் பறக்க கிளீன் போல்டாக்கி ஒரேநாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஹிமான்ஷு சங்வான். அந்தப்... மேலும் பார்க்க

Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பரிசளித்த த்ரிஷா!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டாவது எடிசன் நேற்று முன்தினம் மலேசியாவில் நடந்து முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்... மேலும் பார்க்க

Abhishek Sharma: ``என் கரியர் முழுக்க செய்ததை 2 மணிநேரத்தில் செய்துவிட்டார்" - அபிஷேக் குறித்து குக்

டி20 கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் தனது அபார ஆட்டத்தால் இந்திய இளம்படையின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார் அபிஷேக் சர்மா.ஐ.பி.எல்லில் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட்டுடன் ஓப்பனிங்கில் இறங்... மேலும் பார்க்க