செய்திகள் :

Maragatha Nanayam 2 : மீண்டும் இணையும் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி?

post image

நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி, முணீஷ்காந்த், ஆனந்த் ராஜ், டேனியல் ஆண்டனி, மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் மரகத நாணயம்.

2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தமிழ் ஹாரர் காமெடி படங்களில் தனித்துவமாக நின்று, இன்றளவும் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.

மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன் நேற்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நடிகர் ஆதி, ஏ.ஆர்.கே சரவன், நிக்கி கல்ராணி உடனிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "மகிழ்ச்சி நிறைந்த வெற்றிகரமான சூப்பர் வருடமாக இந்த ஆண்டு அமையட்டும். மரகத நாணயம் 2 அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்" எனப் பதிவிட்டிருந்தார்.

கடந்த வாரத்தில் சப்தம் திரைப்பட நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதி, " 'மரகத நாணயம் 2' விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. முதல் கதை சிறியதாக இருந்தது, 2-ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். முதல் பாகத்தைப் போல 2-ம் பாகத்திலும் பொறுப்புடன் பணிபுரியவுள்ளோம். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்" எனப் பேசியுள்ளார்.

ஏ.ஆர்.கே சரவன் மரகத நாணயம் படத்தைத் தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா நடித்த வீரன் திரைப்படத்தை இயக்கினார். அவரது அடுத்த படமாக மரகத நாணயம் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கிய சப்தம் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

Aadhi: ``பேய் பயம் இருக்கு... அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை..'' - நடிகர் ஆதி

'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'.'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இ... மேலும் பார்க்க

Kingston: ``அவர் சொல்ல மாட்டார்; செயலில்தான் காட்டுவார்..." - சுதா கொங்கரா பாராட்டு

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், G.V. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் G.V. பிரகாஷ், இப்படத்தின் மூலம் தயாரிப... மேலும் பார்க்க

Trisha: ``VTV இதயத்துக்கு நெருக்கமான படம்.." - 15 ஆண்டுகள் நிறைவு; வெற்றிக்கு த்ரிஷா சொன்ன காரணம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகான பாடல்களுடன் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள... மேலும் பார்க்க

Vetrimaaran: ``வெற்றி மாறன் என் அம்மா மாதிரி ஏன்னா..." - நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரா... மேலும் பார்க்க

Dragon: `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்!' - `டிராகன்' பட வெற்றியைக் கொண்டாடிய `LIK' குழுவினர்!

`டிராகன்' திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது.`லவ் டுடே' படத்திற்குப் பிறகு மீண்டும் `டிராகன்' திரைப்படத்தின் மூலம் ஒரு சென்சேஷனல் ஹிட் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங... மேலும் பார்க்க

Kingston: `` 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில ஜி.வி சாரோட ரசிகனாகிட்டேன்" - அஸ்வத் மாரிமுத்து

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரா... மேலும் பார்க்க