செய்திகள் :

Mark Carney: "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது" - புதிய பிரதமர் மார்க் கார்னி உறுதி

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற நாள் முதல் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கத் தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாறான சூழலில், இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா (Canada) பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் - ஜஸ்டின் ட்ருடோ
டொனால்ட் ட்ரம்ப் - ஜஸ்டின் ட்ருடோ

மேலும், ``கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுமா.... அதற்கு வாய்ப்பே இல்லை. ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் கனடா ஒருபோதும் பின்வாங்காது" என்று தெரிவித்த ஜஸ்டின் ட்ருடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவியில் தொடர்வேன் என்று கூறினார். இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடா பிரதமராகவும் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் எனச் சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பெய்லிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றனர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, ``நம்முடைய நாட்டின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புகிறது. ட்ரம்ப் நமது கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களைத் தாக்குகிறார். இதில், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. இந்தத் தருணத்தில், கனேடியர்களுக்குத் தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பதுதான்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

சிறந்த தேசத்தை உருவாக்கப் போராடத் தயாராக இருக்கிறேன். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல. ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா இருக்காது. நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், நெருக்கடி மேலாண்மையில் உங்களுக்கு அனுபவமும், பேச்சுவார்த்தை திறனும் தேவை" என்று கூறினார்.

மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும், 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

போலி வாக்காளர் அட்டை: "எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன" - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப... மேலும் பார்க்க

Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்ட் - பின்னணி என்ன?

இந்தியாவில் பல ஆயிரம் கோடி புரளக்கூடிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து, அவர... மேலும் பார்க்க

நகைக்கடனில் புதிய விதிமுறை: `ஏழை மக்களை வாட்டும்’ - RBI திரும்பப்பெற வலியுறுத்தும் சீமான்

ரிசர்வ் வங்கி பழைய விதிமுறையின்படி, வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கட்டி, மறு அடமானம் வைக்கலாம். ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய விதிமுறையின்படி, இனிமேல... மேலும் பார்க்க

மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் சொல்வதென்ன?

சமீபத்தில் வெளி வந்த சாவா என்ற இந்தி படம் சத்ரபதி சிவாஜி மகன் சத்ரபதி சாம்பாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சத்ரபதி சாம்பாஜியை மொகலாய மன்னன் ஒளரங்கச... மேலும் பார்க்க

`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்த மோதல்| முழு விவரம்

நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க எம்.பி எழுப்பிய கேள்விஎழுப்பியதற்கு, `நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்... மேலும் பார்க்க

`திமுகவுக்கு எதிரான பிளான்... எடப்பாடிக்கு என் ஆதரவு’ - சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய கல்வி கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இது நம் குழந்தைகளுக்கு எழு... மேலும் பார்க்க