செய்திகள் :

Momos: "சைவ உணவுதான் வேண்டுமென்றால் சைவ உணவகத்தில் ஆர்டர் செய்யலாமே?" - நுகர்வோர் நீதிமன்றம் கேள்வி

post image

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாதரைச் சேர்ந்த தம்பதியினர் 'வாவ் மோமோஸ்' கடையிலிருந்து 'ஸ்டீம் டார்ஜிலிங் மோமோ காம்போ'வை ஆர்டர் செய்திருக்கின்றனர்.

சைவ சிற்றுண்டியை ஆர்டர் செய்த அவர்களுக்கு சிக்கன் மோமோஸ் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தம்பதி, நுகர்வோர் நீதிமன்றத்தில், ``சைவ உணவு உண்ணும் பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

அதனால், எங்களின் மத உணர்வு புண்பட்டது. எனவே, எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

வாவ் மோமோஸ்
வாவ் மோமோஸ்

இந்த வழக்குக்குப் பதில் மனுத்தாக்கல் செய்த வாவ் மோமோஸ் நிறுவனம், "சைவம் - அசைவம் என இரண்டும் இருக்கும் காம்போவைத்தான் தம்பதியினர் தேர்வு செய்திருந்தார்கள்.

எங்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதும், அவர்களின் பணம் திரும்பிக் கொடுக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நுகர்வோர் நீதிமன்றம், ``புகார்தாரர்கள் கண்டிப்பாக சைவ உணவு உண்பவர்களாகவும், அசைவ உணவு அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருந்தால், சைவ உணவுக்கென இருக்கும் உணவகத்திலிருந்து உணவை ஆர்டர் செய்வதற்குப் பதிலாக அசைவ மற்றும் சைவ உணவுகளை வழங்கும் உணவகத்திலிருந்து ஏன் ஆர்டர் செய்ய வேண்டும்?

மேலும், புகார்தாரர்கள் சைவ மோமோக்களை ஆர்டர் செய்ததற்கான ஆதாரத்தை வழங்கத் தவறிவிட்டனர். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனத் தீர்ப்பளித்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

9 மாதங்களில் 3 முறை லாட்டரி வென்ற 'ரியல் லக்கி பாஸ்கர்' - ரூ.21 கோடியை என்ன செய்யப் போகிறார்?

லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே... மேலும் பார்க்க

Trump: தடுக்கி விழுந்த ட்ரம்ப்: வைரலாகும் வீடியோ; ஜோ பைடனுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் மக்கள்!

2023-ம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அப்போதைய அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.... மேலும் பார்க்க

Google: ``அடுத்துவரும் கூகுளின் தலைவர்..." - வைரலாகும் சுந்தர் பிச்சையின் பேச்சு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சமீபத்தில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. அதில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தின் அட... மேலும் பார்க்க

`அப்பா, நான் பிரபலமாக போகிறேன்' - 19 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்த Dusting Challenge Trend

அமெரிக்காவின் அரிஜோனா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரென்னா ஓ ரூர்க் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக அவர் செய்த டஸ்டிங் சவால் (d... மேலும் பார்க்க

`500 ரூபாய்' - குழப்பத்தை ஏற்படுத்திய யூடியூப் வீடியோ; ``தவறான தகவலை பகிர வேண்டாம்'' - RBI

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது.பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் புதிதாக 200,... மேலும் பார்க்க

Man Mom: மன அழுத்தம்; அணைப்பு... சீன இளம் பெண்களிடம் வைரலாகும் 'ஆண் அம்மா' - அப்படி என்றால் என்ன?

தற்போதைய உணவு கலாசாரம், நுகர்வு கலாசாரம், பொருளாதாரத் தேவைகள் என சமீப காலமாக மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரித்திருக்கிறது. வேலை பளு, காதல் தோல்வி, குடும்ப சூழல் என இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்... மேலும் பார்க்க