தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
Ponmudi: சேறு வீசப்பட்டதன் பின்னணி என்ன..? - அமைச்சர் பொன்முடி சொன்ன விளக்கம்!
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது.
இதனால் விழுப்புரம் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து, ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்த புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியர் பழனியுடன், வனத்துறை அமைச்சர் பொன்முடி நேற்று சென்றிருந்தார்.
அப்போது அவர் தன்னுடைய காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. அதில் கோபமடைந்த மக்கள், 'காரில் இருந்து இறங்க மாட்டீங்களா... நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள் ?' என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், அவர்கள் மீது மழை சேற்றை வாரி இறைத்தனர். அத்துடன் உடனே சாலை மறியலிலும் அமர்ந்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சேற்றை யார் அடித்தது என எல்லோருக்கும் தெரியும். எல்லோர் மீதும்தான் சேறுப்பட்டது. வேண்டும் என்றே அரசியல் செய்ய இதுகுறித்து பேசுகிறார்கள்.
சேற்றை அடித்தவர் எந்த கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சாலை மறியல் செய்யப்பட்டது. யார் அரசியலாக்க நினைத்தாலும், வெள்ள தடுப்பை நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். எனக்காக பத்திரிகையாளர்கள் புகார் கொடுக்க வேண்டும். இதனை நாங்கள் பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs