செய்திகள் :

Rajasthan Royals: LSG-யிடம் 2 ரன்னில் தோற்றது மேட்ச் பிக்ஸிங்கா? - குற்றச்சாட்டும், RR விளக்கமும்!

post image

சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகளைப் போல நடப்பு ஐ.பி.எல் சீசனில் மோசமாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் இணைந்திருக்கிறது. அதிலும், டெல்லி, லக்னோ அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு போட்டிகளில் கைமேல் இருந்த வெற்றியை எதிரணிக்கு ராஜஸ்தான் தாரை வார்த்தது என்றே கூறலாம்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

இந்த நிலையில், லக்னோவிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மேட்ச் ஃபிக்ஸிங்காக இருக்கலாம் என்று, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தற்காலிக குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் பிஹானி சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.

இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து, ஜெய்தீப் பிஹானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை செயலாளரிடம் முறையாகப் புகார் அளித்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், "தற்காலிகக் குழுவின் ஒருங்கிணைப்பாளரால் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பொது அறிக்கைகள் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் மல்டி ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RMPL), ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில், பி.சி.சி.ஐ ஆகியவற்றின் நற்பெயர், நம்பகத்தன்மை மீது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை, கிரிக்கெட்டின் நேர்மையையும் கெடுக்கின்றன" என்று தெரிவித்திருக்கிறது.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

லக்னோ அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ராஜஸ்தான் கையில் 6 விக்கெட்டுகள் இருந்தது. இருப்பினும், ஆவேஷ் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LSG vs DC: லக்னோவிடம் பழைய கணக்கைத் தீர்த்த KL ராகுல்! பண்ட் எந்த இடத்தில் மேட்சை விட்டார்?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் தனது முதல் ஆட்டத்திலேயே டெல்லியிடம் நூலிழையில் தவறவிட்ட வெற்றியை, தனது சொந்த மைதானத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நேற்று (ஏப்ரல் 22) அக்சர் அண்ட் கோ-வை எதிர்கொண்டது... மேலும் பார்க்க

Yuvraj Singh: "என் தந்தையைப் போல பயிற்சியாளராக அல்லாமல் என் மகனுக்கு தந்தையாக இருப்பேன்" - யுவராஜ்

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது தந்தையின் வளர்ப்பு, அவருடனான தனது உறவுமுறை, அவரின் கண்காணிப்பில் தான் மேற்கொண்ட தீவிர கிரிக்கெட் பயிற்சிகள், அந்த அனுபவங்களால் தன்... மேலும் பார்க்க

Dhoni: 'என்னால் சகித்துக்கொள்ள முடியாத வதந்தி அதுதான்...'- தோனி ஓப்பன் டாக்

ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசனுக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டிருக்கிறார். அதில், தோனி பற்றி முன்... மேலும் பார்க்க

Dhoni: "தோனி போன்ற ஒரு கேப்டனை பார்க்கவே முடியாது; காரணம்..." - நெகிழ்ந்த அன்ஷுல் கம்போஜ்

தோனி குறித்து சி.எஸ்.கே வீரர் அன்ஷுல் கம்போஜ் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். "தோனி தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தால் கூட நான் அவரையேப் பார்த்துக்கொண்டிருப்பேன். இதற்கு முன்பு அவரை நேரில் சந்தி... மேலும் பார்க்க

CSK: '2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால்..!' - தொடர் தோல்வி குறித்து CEO காசி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. வெறும் இரண... மேலும் பார்க்க

Shubman Gill: `விரைவில் திருமணமா?' - வர்ணனையாளர் கேள்விக்கு வெட்கப்பட்டு பதில் சொன்ன சுப்மன் கில்

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதின... மேலும் பார்க்க