செய்திகள் :

Ramalan: ``உணவு தண்ணீர் மட்டும் இல்ல... இதுவும் கூடாது'' - முஸ்லிம்களின் நோன்பு குறித்து தெரியுமா?

post image

முஸ்லிம்களின் மிகப் பிரதானமான வழிபாடு என்றால் அது நோன்பு. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதம் நாளை முதல் தொடங்குகிறது. அதென்ன ரமலான் நோன்பு... முஸ்லிம்கள் அதை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் புதுப்பள்ளியில் இமாமாக பணியாற்றும் மன்சூர் அலி ஆலிம் நூரி என்பவரை தொடர்புகொண்டோம்.

ஆலிம் மன்சூர் அலி நூரி

அவர், ``ரமலான் மாதம் இஸ்லாமிய நாள்காட்டியின் படி ஒன்பதாவது மாதம். இந்த மாதத்தை இஸ்லாமியர்களான நாங்கள் புனித மாதங்களில் ஒன்றாகக் கருதுகிறோம். எங்களின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காண்பித்துக் கொடுத்த வழிகாட்டுதலின்படியே இந்த நோன்பை கடைபிடித்து வருகிறோம். கி.பி. 624-ம் ஆண்டு இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் பிறை பார்த்த மறுநாளிலிருந்து இந்த நோன்பு தொடங்கும்.

அதிகாலை வானில் வரும் மெய் வெள்ளை என்ற (ஸஹர்) நேரம், அதாவது, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நோன்பின் தொடக்க நேரம் அதிகாலை 5 மணி முதல், மாலை சூரியன் மறையும் (இஃப்தார்) நேரம் வரை பகலில் மட்டும் நோன்பு இருப்போம். இந்த நோன்பு இருக்கும் நேரத்தில், நீராகரமோ, திட ஆகாரமோ எதுவும் வயிற்றுக்குள் செல்லக் கூடாது. கணவன் மனைவியாக இருந்தாலும் நோன்பு நேரத்தில் உறவுகொள்ளக் கூடாது. சில சகோதர சமயத்தவர்கள் 'எச்சில் கூடவா விழுங்கக் கூடாது' எனக் கேட்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் அல்ல. வழக்கம் போலதான் இருப்போம். வெளியிலிருந்து எந்த ஆகாரத்தையும் வயிற்றுக்குள் செலுத்தக் கூடாது என்பதுதான் முக்கிய நிபந்தனை.

இஃப்தார்

இந்த நோன்பு குழந்தைகளுக்கெல்லாம் கிடையாது. வயது வந்தவர்கள் மட்டும்தான் கடைபிடிக்க வேண்டும். அதே நேரம், நோயாளிகள், கர்ப்பிணிகள், பால்கொடுக்கும் தாய்மார்கள், பயணத்தில் இருக்கும் பயணிகள் ஆகியோர் அந்த நாள்களில் நோன்பு வைக்கத் தேவையில்லை. நோன்பு இருக்கும் போது பாவமான காரியங்களில் அதாவது பொய், ஏமாற்றுவது, புறம்பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் நோன்பு வைத்தும் எந்தப் பயனும் இல்லை என முஹம்மது நபி (ஸல்) கண்டித்திருக்கிறார்கள்.

யாராவது உங்களிடம் வாக்குவாதத்துக்கோ, சண்டைக்கோ வந்தால் கூட நான் நோன்பு வைத்திருக்கிறேன் எனக் கூறி அங்கிருந்து விலகிவிட வேண்டும் என வழிகாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த மாதத்தில், கூடுதலாக பிறரின் பசியை உணரும் வாய்ப்பு இருப்பதால், அதிகம் தர்மம் செய்ய வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நோன்பின் மூலம் மன ஓர்மையும், நம் மீது நமக்கான கட்டுப்பாடும் பலமாகும். உதாரணத்துக்கு, நோன்பு முடியும் இஃப்தார் நேரம் மாலை 6:25 என்று வைத்துக்கொள்ளுங்கள். நோன்பு இருப்பவர் 6:24-க்கு ஏதாவது சாப்பிட்டாலோ, குடித்தாலோ கூட அவருடைய அன்றைய நோன்பு முறிந்து விடும்.

நோன்பு முடிக்கும் இஃப்தார்

எனவே, எவ்வளவு பசி, தாகமாக இருந்தாலும் மனதை கட்டுப்பாடுடன் வைத்திருந்து, நமக்கு அனுமதிக்கப்பட்டதை, உரிமையானதை மட்டும்தான் அனுபவிக்க வேண்டும் என்பதை இந்த நோன்பு பழக்கப்படுத்தும். நோன்பின் நோக்கம் 'இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்காக நம்முடைய வாழ்வை சீராக்கிக் கொள்ள வேண்டும்' என்ற இறையச்சம்தான் பிரதானம் என்கிறது குர்ஆன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திண்டிவனம்: ``கள ஆய்வில் 8-ம் நூற்றாண்டு கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள்...'' - ஆய்வாளர் சொல்வதென்ன?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான கோ.செங்குட்டுவன் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தனியார் நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதி... மேலும் பார்க்க

``என் வாழ்க்கையில் சிறந்த முடிவு'' - அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தொழிலதிபர் சொல்வதென்ன?

இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது. அப்படி சென்றவர்கள் சிலர் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். சிலர் சிறிது காலம் இந்தியா வந்து செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலா... மேலும் பார்க்க

கோவை: தமிழ் பண்பாட்டை கொண்டாடும் `தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா!' - ஈஷாவில் பிரமாண்ட ஏற்பாடு

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்ப... மேலும் பார்க்க

`Youtube' தான் வாழ்வாதாரமே! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் டெக் கிராமம் - எங்கே?

பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில், குடும்பத்திற்கு ஒரு யூடியூபராவது இருக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்... மேலும் பார்க்க

Chinese New Year: 7 நாள் விடுமுறையுடன் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு... அப்படி என்ன சிறப்பு?

சீனாவில் முக்கியமாக கொடடப்படும் திருவிழா சீனப் புத்தாண்டு (Chinese New Year). இது சந்திர-சூரியன் அடிப்படையில் அமைந்த சீன நாள்காட்டி (காலண்டர்) துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இது வசந்தப் பண்டிகை அல்லத... மேலும் பார்க்க