`Youtube' தான் வாழ்வாதாரமே! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் டெக் கிராமம் - எங்கே?
பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில், குடும்பத்திற்கு ஒரு யூடியூபராவது இருக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர்.
சுமார் 80 வீடு கொண்ட இந்த கிராமம் பாகிஸ்தானின் மற்ற கிராமங்களை போல் வாழ்க்கை முறையை நடத்தினாலும் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் உள்ளார்கள். இவர்கள் எடுக்கும் வீடியோக்களில் பெண்கள் இடம்பெறமாட்டார்கள். மத தொடர்பான காரணங்களால் கிராம பெரியவர்கள் பெண்களை வீடியோவில் இடம் பெற அனுமதிக்கவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/vcd14fiu/hero-image-1.jpg)
இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு யூடியூபருக்கும் பல லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவில் பணம் ஈட்டி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒருவர் இது குறித்து கூறுகையில், `தான் ஆண்டு முழுவதும் சம்பாதித்த பணத்தை YouTube மூலம் ஒரே நாளில் சம்பாதிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இவர்கள் பக்தி, கருணை தொடர்பான வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் YouTube இல் சம்பாதிப்பதற்காவே ஊர் திரும்பி உள்ளனர். கிராமவாசிகள் சிலர் இதற்கான ஐடியாக்களை பகர்ந்ததை தொடர்ந்து துபாயில் இருந்து மீண்டும் பாகிஸ்தானிற்கு வந்து YouTube மூலம் சம்பாதித்து வருகின்றனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play